புதுடெல்லி:கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற புதிய மாணவர் அமைப்பின் அதிகாரப்பூர்வ பிரகடனம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இத்துடன் இந்தியா இண்டர்நேசனல் சென்டரில் நடைபெறும் தேசிய மாணவர்கள் மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச்சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். கல்லூரி வளாகங்களில் இழந்துபோன போராட்டவீரியத்தை திரும்பபெற்று சமூக அக்கறைக்கொண்ட மாணவ செயல்வீரர்களை உருவாக்குவதே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியம் என மாநாட்டு கண்வீனர் அ.முஹம்மது யூசுஃப் தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாநில அளவிலான கமிட்டிகளை உருவாக்குவதே தேசிய மாணவர்கள் மாநாட்டின் முதல் நிகழ்ச்சி நிரல். இம்மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத், எக்ணாமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி கன்சல்டிங் எடிட்டர் கவுதம் நவ்லாஹ் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்குவார்கள்.
மதியத்திற்கு பின்பு "சமூக மாற்றத்தில் மாணவர்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். இக்கருத்தரங்கில் சயீத் அப்துற்றஹ்மான் கீலானி, பேராசிரியர் ஸம்சுல் இஸ்லாம்(டெல்லி பல்கலைகழகம்), பேராசிரியர் தனிகா சர்கார்(ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம்), பேராசிரியர் பி.கோயா(ஆசிரியர்,தேஜஸ் பத்திரிகை), சந்தீப் சிங்(ஜவஹர்லால் நேரு பல்கலைகழக் யூனியன் தலைவர்) ஆகியோர் பங்கேற்பர்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்: on "டெல்லியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிரகடனம்"
கருத்துரையிடுக