மும்பை:மும்பையில் பள்ளிகளுக்கிடையேயான பாரம்பரியமிக்க ஹாரிஸ் ஷீல்டு 16 வயதுக்குட்பட்டோருக்கான 3 நாள்கள் கிரிக்கெட் போட்டியில் ஸ்பிரிங்ஃபீல்டு ரிஸ்வி அணி சார்பாக ஆடிய சர்பராஸ்கான் 2 நாட்கள் தாக்குபிடித்து அருமையாக ஆடி மொத்தம் 421 பந்துகளை சந்தித்து 56 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 439 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் இத்தொடரின் 113 ஆண்டுகால வரலாற்றில் அதிகபட்ச ரன்களை பதிவுச்செய்தார். இதற்கு முன்பு ரமேஷ் நாகதேவ் அதிகபட்சமாக 427 ரன்கள் (1963-64) எடுத்ததே சாதனையாக இருந்தது.
கடந்த 1988 ஆம் ஆண்டு இதே ஹாரிஸ் ஷீல்டு தொடரில்தான் சிரத்தாஸ்ரமம் பள்ளிக்காக ஆடிய சச்சின் டெண்டுல்கர்(ரன்கள்329), வினோத் காம்ப்ளி(ரன்கள்349) ஜோடி 664 ரன்கள் குவித்து சாதனைப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சர்பராஸ்கான் கூறுகையில், "நான் இலக்குகளை நிர்ணயித்து விளையாடுவேன். 300 ரன்களை எட்டியதும் சச்சினின் பள்ளி சாதனையை தகர்க்க விரும்பினேன். இறுதியில் 439 ரன்கள் எடுத்து சாதனை படைத்தேன். ஐ.பி.எல் தொடரின்போது சச்சினை அருகில் பார்த்தேன். அப்போது வங்கதேச வீரர் அஷ்ரபுல்லுக்கு 'பேட்டிங்' டிப்ஸ் வழங்கிக்கொண்டிருந்தார். பவுலரின் கையிலிருந்து பந்து வருவதை நன்கு கவனித்தால்தான் எளிதாக அடித்து ஆடமுடியும் எனக்கூறினார். இதனை நானும் பின்பற்றி ரன்மழை பொழிந்தேன்". என்றார். சாதனைபுரிந்த சர்பராஸ் ஆறாவது வகுப்பு பயிலும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துகள்: on "சாதனை புரிந்த சர்பராஸ்கான்"
ALL the best Surfras khan, Inshaallah you will be the shining star in Indian cricket team. May allah bless you.
கருத்துரையிடுக