மும்பை: பிற மாநிலத்தவர்கள் அதிகமாக மஹாராஷ்ட்ராவில் நடைபெறும் வேலைக்கான தேர்வுகளில் பங்குபெறுவதற்கு எதிராக நவநிர்மாண்சேனா விடுத்த மிரட்டலையும் புறக்கணித்து தேர்வுகள் சுமூகமாக நடைபெற்றதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
மாநிலத்தின் எல்லா தேர்வு மையங்களில் பாதுகாப்பை மாநில அரசு பலப்படுத்தியிருந்ததாகவும், எந்தவொரு அசம்பாவிதம் நடைபெற்றதாக தகவல் இல்லை எனவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பை, புனே, நாக்பூர், ஒளரங்காபாத் ஆகிய இடங்களிலிலுள்ள மையங்களில் தேர்வு நடைபெற்றது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு நவநிர்மாண் சேனா தலைவர்ன் ராஜ்தாக்கரே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்தும் தேர்வுகளில் மராட்டியர்களுக்கு அதிகமாக உட்படுத்தவேன்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 1100 காலியடங்களில் பிறமாநிலத்தவர்களை நியமிக்கக்கூடாது என்று நவநிர்மாண் சேனாவின் இன்னொருதலைவர் சந்தீப்பாண்டே வலியுறுத்தியிருந்தார். ஆனால் இதனை புறக்கணித்துக்கொண்டு பிறமாநிலத்தவர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்திய தேர்வில் கலந்துக்கொண்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பிசுபிசுத்துப்போன நவநிர்மாண் சேனாவின் மிரட்டல்"
கருத்துரையிடுக