துபாய்:47 நாடுகளிலிருந்து 890 நிறுவனங்கள் பங்கேற்கும் துபாய் ஏர் ஷோ இன்று ஆரம்பிக்கிறது. உலகில் நடைபெறும் மூன்று விமான கண்காட்சிகளில் முக்கிய ஒன்று துபாயில் நடைபெறும் விமானக்கண்காட்சி என யு.ஏ.இ பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேஹ் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறிகையில் துபாயில் பதினொன்றாவது முறையாக நடைபெறும் இக்கண்காட்சி சாதனை படைத்துவருவதாக தெரிவித்தார். 7000 சதுர மீட்டர் இடத்தில் இக்கண்காட்சி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது சென்ற முறையை விடவும் 10 சதவீதம் அதிகம். 40 நாடுகளிலிருந்து 73 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ராணுவம் மற்றும் பயணிகள் விமானத்துறையின் மிகவும் நவீன தொழில்நுட்ப கண்காட்சிதான் இம்முறை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியை காண்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து 18 பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், 19 ஏர்ஃபோர்ஸ் கமாண்டர்கள், 11 சீஃப் ஆஃப் ஸ்டாஃப், 33 நாடுகளிலிருந்து விமானப்போக்குவரத்து தலைவர்கள், பெரும்பாலான விமானக்கம்பெனிகளின் உரிமையாளர்கள் ஆகியோர் வருகின்றனர்.
நேற்று முதல் ஆகாயத்தில் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்கன் ஏர்ஃபோர்ஸ் எஃப் 22 ராஃப்டர், பிரிட்டீஷ் ராயல் ஏர்ஃபோர்ஸின் தைஃபூன், சீனாவின் ஃபால்கன் ஜெட் ட்ரைன் உட்பட 130 விதமான விமானங்கள் 5 நாள்கள் நீடிக்கும் கண்காட்சியில் பங்குபெறும்.
துபாய் விமானப்போக்குவரத்தும், யு.ஏ.இ ராணுவமும் இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடுச்செய்துள்ளன. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியின் போது 45 ஆயிரம் பேர் பங்கேற்றனர் அதில் 155 பில்லியன் டாலர் வியாபாரம் நடைபெற்றது. ஆகாயத்தில் சாகசங்களும் இதில் இடம்பெறும்.
போக்குவரத்தை சரிசெய்ய துபாய் போலீஸ் எமிரேட்ஸ் சாலை உட்பட பகுதிகளில் பார்க்கிங்குக்கு தடைவிதித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "துபாயில் விமானக் கண்காட்சி இன்று ஆரம்பம்"
கருத்துரையிடுக