இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்கா போராளிகளுக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபது ஜெனரல் அஷ்பாஹ் கயானி கூறியுள்ளார்.
ராவல் பிண்டியிலிலுள்ள ராணுவமையத்தில் வைத்து அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜேம்ஸ் ஜாண்சனுடனான உரையாடலின்போது இதனை தெரிவித்தார் கயானி. ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தை இரண்டாவது வரிசையில் நிறுத்தும் அமெரிக்காவின் திட்டத்தை விமர்சித்த கயானி அமெரிக்க நடத்தும் தாக்குதல்களால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் இத்தாக்குதல்கள் தாலிபான்களின் ஆதரவை அதிகரிக்கவே செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2008 முதல் 687 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் 70 சதவீத பிரதேசமும் அமெரிக்க தாக்குதலுக்கு இரையாகியுள்ளது. அமெரிக்காவின் ஆதிக்கம் பாகிஸ்தான் ராணுவத்தின் நோக்கத்தை பாதிப்பதாகவும் கயானி தெரிவித்தார். ஜாண்சன் ஆட்சியாளர்களுடனும், ராணுவ அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தவேண்டும்: பாக்.ராணுவ தளபதி"
கருத்துரையிடுக