வாஷிங்டன்: எட்டு வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போரில் அமெரிக்காவால் வெற்றிபெற இயலாது என செனட் ஆயுதபடை கமிட்டி தலைவரும் செனட்டருமான கால் லெவின் சி.பி.எஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு தனிப்பட்ட ரீதியில் வெற்றிபெறக்கூடிய சூழல் ஆப்கானிஸ்தானில் இல்லை. தற்போது ஆப்கான் ஆதரவான எழுச்சி அலை வீசுகிறது அல்லாமல் அமெரிக்காவுக்கு ஆதரவான எழுச்சி அலை அல்ல. கூட்டுப்படைகளின் போதிய ஒத்துழைப்பும், ஆப்கானிஸ்தான் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையின் முழுமையான ஆதரவும் இருந்தால் மட்டுமே தோற்காமல் ஆப்கானில் நிலைபெற இயலும். அதிக படையினரும் புதிய கொள்கையும் ஆப்கானில் தேவையென்றும் இதுதான் அதிபர் ஒபாமாவின் எதிர்காலத்தை தீர்மானிக்குமென்றும் லெவின் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் கூடுதல் படையை அனுப்புவதற்கான புதிய கொள்கைகள் அடங்கிய திட்டத்தை இன்று அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு தயாரகும் சூழலில் லெவினின் இப்பேட்டி வெளியாகியுள்ளது. ஆப்கானில் 35 ஆயிரம் படையினர் அனுப்பப்படுவார்கள் எனத்தெரிகிறது. இதன் மூலம் ஆப்கானில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். ஆப்கானில் இதுவரை 900 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வெற்றிபெற இயலாது:அமெரிக்க செனட்டர்"
கருத்துரையிடுக