30 நவ., 2009

மாணவர்கள் விழித்துக் கொள்வதா? பதறும் இந்துத்துவவாதிகள்

தினமலர் பத்திரிக்கையின் வலைப் பதிவில் பார்த்த ஒரு செய்தி.. என்னவென்றால், சமச்சீர் கல்விக்கான பொது பாடத்திட்ட வரைவு, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வரைவுப் பாடத்திட்டத்தில், இந்து மத துவேஷம் மேலோங்கி இருப்பதாகவும் அது மாணவ சமுதாயத்தை மிகவும் பாதிப்பதாகவும் கூறியிருக்கின்றார் பட்டுக்கோட்டையை சேர்ந்த இந்து சமய நற்பணி மன்ற தலைவரான கார்த்திகேயன்.
அவர் கூறியதாவது,
மூன்றாம் வகுப்பு (சமூக அறிவியல்): வ.எண்: 9
தாக்கத்தை ஏற்படுத்தும் மக்கள் - பாடப்பொருள் ஈ.வெ.ரா. பெரியார். மூன்றாம் வகுப்பு மாணவனிடம் என்ன தாக்கத்தை ஈ.வெ.ரா. ஏற்படுத்துகிறார்? குழந்தைகளை கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூற, இப்பகுதியை வைத்திருக்கிறார்களா?

அனைத்து மக்களும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று பெரியார் போராட்டம் நடத்தியதாக நான் படித்த பாடப்புத்தகத்தில் இருந்தது. கோவிலுக்கு போகாதே என்று சொல்வதற்காகவா அவர் அனைவரும் கோவிலுக்குள் செல்ல அனுமதி வேண்டும் என்று போராடினார்.?

நான்காம் வகுப்பு (தமிழ்): மறுமலர்ச்சிப் பாடல்கள்,
விழிப்புணர்வு பாடல்கள் என்ற தலைப்பில் இடம்பெறும் பாடல்கள் பாரம்பரியத்தை நையாண்டி செய்யாமல், யாரையும் மனம் புண்படுத்தாத பாடலாக இருக்க வேண்டும்.

பாரம்பரியம் என்றால்? இவர் எதனை கூறுகின்றார் என்று தெரியவில்லை?

ஐந்தாம் வகுப்பு (தமிழ்):
மூடநம்பிக்கை என்ற தலைப்பு வரைவில் இடம் பெற்றுள்ளது.
மூட நம்பிக்கை என்பது சமுதாயம் தொடர்பானதாக இருக்க வேண்டும்; மதம் தொடர்பானதாக இருக்கக் கூடாது. அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கை இருக்கிறது. இந்து மதத்தை மட்டும் குறிவைப்பதாக இருக்கக் கூடாது.

மூட நம்பிக்கை என்றால் சமுதாயம் தொடர்பாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். எல்லா மதத்திலிருந்தும் மூட நம்பிக்கைகள் களையப்பட வேண்டியதே.

ஆறாம் வகுப்பு (சமூக அறிவியல்): வரலாறு அலகு - 3
கட்டுக்கதை மற்றும் நாடுதல், திராவிடக்கலாச்சாரம், வேதகாலம், காப்பிய காலம் (சமூக அமைப்பு மற்றும் பிரிவுகள்). இதில் வேதகாலம் என்பது கட்டுக்கதையா? அப்படியென்றால் அக்காலத்தில் தோன்றிய ஆயுர்வேதம், யோகாசனம், வேதங்கள், உலக உண்மை தத்துவ வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இன்றும் வாழ்கிற வேத தத்துவங்கள் கட்டுக் கதையா? ஆரிய, திராவிட இனவாதம் பேசி, மாணவப் பருவத்திலேயே பிரிவினை எண்ணத்தைத் தூண்டுவது இந்த பாடத்தின் நோக்கமா? ஆரியர் பற்றி உயர்வாகக் கூறுவதாகக் கூறி, சோமபாணம், சுராபாணம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, ஆரிய கலாசாரத்தின் உண்மையான பெருமையை வெளிப்படுத்தும் பாடம் வேண்டும். அப்பெருமைக்கு சற்றும் சளைக்காமல், திராவிட கலாசாரம் இருந்தது எனக் கூற வேண்டும். இரு கலாசாரத்திலும் ஒத்த கருத்துகளை வெளிக்கொணர வேண்டும்.

வேதகாலத்தை இவராகவே கட்டுக்கதை என்று கூறிக்கொள்கிறார். ஆரியர்களைப் பற்றி உண்மைகளை கூற வேண்டும் என்று கூறுவதை விடுத்து ஆரியர்கள் பற்றி பெருமை பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஏன், ஆரியர்களின் மற்ற உண்மைகளை இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டாமா?

ஏழாம் வகுப்பு (தமிழ்): துணைப்பாடம் - அன்னை தெரசா:
மதத்தைத் தாண்டி சேவை செய்யும் அமைப்புகளாக, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மாதா அமிர்தானந்தமயி மடம், சாய் சேவா சங்கம் போன்றவை செயல்பட்டு வருகின்றன. அன்னை தெரசாவின் தொண்டு பற்றி எழுதும்போது, இந்த மடங்களின் சேவைகள் பற்றியும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். உரைநடை- நம் அன்றாட வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது மூட நம்பிக்கையா? அறிவியலா? (விவாதித்தல்). இதற்கு பதில், நேரடியாக, இந்துக்களின் ஆன்மிகமா அல்லது அறிவியலா என்று கேட்டிருக்கலாம். இத்தலைப்பை மாற்ற வேண்டும்.

அறிவியலை மட்டும் படிக்கச் செய்து, மாணவர்களின் மனதில் கட்டுப்பாடு இல்லாத ஒரு நிலையை உருவாக்கி விடாதீர்கள். துணைப்பாடம் - மூட நம்பிக்கையை நீக்கும் வகையில் அமைந்த கதை: இந்து மதத்தை இழிவுபடுத்துதாக இந்த கதையை அமைக்கக் கூடாது.

இறுதியில் இவர்கள் அன்னை தெரசாவையும் விட்டுவைக்கவில்லை. மேலும் இவர் ஏன் எப்போதும் மூட நம்பிக்கைகளுக்கும் ஆன்மீகத்திற்கும் முடிச்சு போடுகிறார்கள் என்று தெரியவில்லை. நம்மைப் பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மூட நம்பிக்கைகள் இருக்க முடியாது, மூட நம்பிக்கைகளினால் வளர்ந்த ஆன்மீகத்தை ஆன்மீகமாகவே ஒத்துக்கொள்ள முடியாது.

ஏழாம் வகுப்பு (சமூக அறிவியல்): அலகு - 2 இஸ்லாமியர்கள் வருகை: முஸ்லிம் மன்னர்களின் வருகை பற்றிய மாற்றுக் கருத்து உண்டு. அதனால் அவர்கள் வருகை பற்றி கவனமாக எழுத வேண்டும்.

இஸ்லாமியர்களின் வருகையில் மாறுபட்ட கருத்தை உருவாக்கியவர்களே இவர்கள் தான். மேலும் ஆரியர்களின் வருகையைப் பற்றி பேசினால் இவர்களுக்கு தாங்காது.

எட்டாம் வகுப்பு (தமிழ்):
இன்றைய காலகட்டத்தில் விழாக்கள் அவசியமா? ஆடம்பரமா? இது அரசியல்வாதியின் பிறந்த நாள் பற்றியா? புத்தாண்டு கொண்டாட்டமா? கிறிஸ்துமஸ் விழாவா? ரம்ஜான் பற்றியதா? இந்தத் தலைப்பில் இந்து மத விழாக்களை பற்றிய கருத்துகளை மட்டுமே தெரிவிக்கக் கூடாது.

விழாக்கள் ஆடம்பரமா அவசியமா என்கிற தலைப்பு இவரை ஏன் உறுத்துகின்றது?

(சமூக அறிவியல்): அலகு - 1 முகலாயர்கள்:
அக்பர் காலத்தை தவிர மற்ற அனைத்து முகலாய அரசர்களும், இந்துக்களை கொடுமைப் படுத்தியவர்களே. அதை விரிவாக விளக்குவீர்களா? இடிக்கப் பட்ட இந்து கோவில்கள் பற்றிய விளக்கத்தை கொடுப்பீர்களா? சீக்கிய மதம் தோன்றியதன் அடிப்படை நோக்கம் தெரியுமா?

ஆமாம், முகலாயர்கள் பற்றிய உண்மைகளை கூறினால், இப்படி ஒரு வரலாற்று திரிபுகளை ஏற்படுத்தியவர்களின் ஆண்டாண்டுகால முயற்சி தவிடு பொடியாகிவிடுமோ என்ற அச்சம். தாஜ் மகாலையும், குதுப்மினாரையும், ஏன் மக்காவில் இருக்கும் காபாவையும் தங்களுடையது என்று வாய் கூசாமல் சொல்லும் கூட்டத்தினர் தானே இவர்கள். இவர்களின் கற்பனைகளை அணைபோட்டு யாராலும் தடுக்க முடியாது.

ஒன்பதாம் வகுப்பு (சமூக அறிவியல்) அலகு - 1:
ஆற்றுச் சமவெளி நாகரிகம் இதில் ஜுடோயிசமும், கிறிஸ்தவமும் ஏன் வருகிறது? இவர்களுக்கும் ஆற்றுச் சமவெளி நாகரிகத்திற்கும் என்ன சம்பந்தம்? உலகில் ஆற்றுச் சமவெளி நாகரிகம் இருந்தபோது, இருந்த ஒரே சமயம் இந்து சமயம் மட்டுமே.

அலகு - 2: இடைக்காலம் நிலமானிய முறை
திருச்சபைகளின் பங்கு, அரேபியர்களின் நாகரிகம் மற்றும் இஸ்லாமியர்களின் நன்கொடைகள்: இந்த வரைவு திட்டத்தில் எதை வைத்து இடைக்காலம் என பிரித்துள்ளீர்கள்? திருச்சபைகளுக்கும், நில மானியத்திற்கும் என்ன சம்பந்தம்? திருச்சபைகள் வருவதற்கு முன்பே, நம் முன்னோர்கள் இனாமாக கோவில்களுக்கும், ஆதீனங்களுக்கும் நிலங்களை அளித்துள்ளனர். நில மானிய முறையின் வரலாற்றை எழுதினால், அதில் நம் கோவில்களும், ஆதீனங்களுமே வழிகாட்ட முடியும்.

பத்தாம் வகுப்பு (தமிழ்): பெரியாரின் விழிப்புணர்வு சிந்தனைகள்:
இது தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் பற்றியதா? பெண் விடுதலை பற்றியதா? இந்து மத எதிர்ப்பு பற்றியதா? இந்து மத துவேசம் இருந்தால், அது கண்டிக்கத்தக்கது.

இந்த கருத்து வரவேற்கத்தக்கது. ஒரு மதத்தை யாரும் துவேசம் செய்வது சரியானதல்ல. அதிலும் பாடப் புத்தகத்தில் அது போன்று வருவது நல்லதல்ல.

கம்ப ராமாயணம் இல்லை:
செய்யுள் பகுதியில் கம்ப ராமயணமே இல்லை. கம்ப ராமாயணம் படிக்காமல் தமிழை, தமிழின் வளத்தை எந்த கவிஞனைக் கொண்டு விளக்கப் போகிறீர்கள்? இப்போது பாடத் திட்டத்தில் உள்ளது போல், கம்ப ராமாயணத்தில் ராமனை இழிவாகப் பேசும் வாலி, சூர்ப்பணகை, ராவணன் போன்றவர்களின் பேச்சுகளை தேடிப்பிடித்து வைக்காமல், கம்பனின் கவிநயம் மிக்க பாடல்கள் இருக்க வேண்டும். ராவண காவியம் போன்ற எதிர் கதாநாயக காப்பியங்களை பாடத்திட்டத்தில் வைத்து, அடுத்தவர் மனைவியை கவர்ந்து சென்றவனை கதாநாயகன் ஆக்காதீர்கள்.

கவர்ந்து சென்றவன் கற்போடு தானே அவளை வைத்திருந்தான்? குஜராத்தில் நடந்தது போன்று யாரும் கூட்டு கற்பழிப்பு செய்யவில்லையே. அந்த காம வெறி பிடித்த அயோக்கியர்களுக்கு இலங்கையை சேர்ந்த அசுரர்கள் எவ்வளவோ மேல்.

தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எடுத்துக்காட்டாய் இருந்து வரும் பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம், வள்ளாலாரின் திருமுறைகள், கம்ப ராமாயாணம், கந்த புராணம், வில்லிபாரதம், பாரதியார் கவிதைகள் போன்ற இலக்கியங்களில் இருந்து செய்யுள் பகுதிகள் 80 சதவீதம் இருக்க வேண்டும்.

இவர் சொல்வதை பார்த்தால் பாடத்திட்டத்தில் சாதி மற்றும் இன பிரிவுகளை ஏற்படுத்திய ஆரியர்களைப் பற்றிய துதிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
source:inneram,dinamalar

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாணவர்கள் விழித்துக் கொள்வதா? பதறும் இந்துத்துவவாதிகள்"

கருத்துரையிடுக