6-வது முறையாக ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் பொதுச்செயலாளராக செய்யத் ஹஸன் நஸ்ரல்லாஹ் தேர்வுச்செய்யப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் மாநாட்டைத்தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இம்முடிவில் மேலும் புதிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பல்வேறு இயக்கரீதியான திருத்தங்கள் சமீபத்திய வருடங்களில் இயக்கம் கடந்து வந்த பாதைகளில் சந்தித்த பிரச்சனைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஷேஹ் நாஸிம் கஸ்ஸாம் என்பவர் மீண்டும் துணை பொதுச்செயலாளராக தேர்வுச்செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த அறிக்கை எப்பொழுது ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் உயர்மட்டக்குழுவினரால் நஸ்ருல்லாஹ் பொதுச்செயலாளராக தேர்வுச்செய்யப்பட்டார் என்பதை தெரிவிக்கவில்லை.
ஹிஸ்புல்லாஹ்வின் தலைமைக்கான தேர்தல்கள் 3 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குபின் 2 ஆண்டுகள் தாமதாகவே இத்தேர்தல் நடைபெற்றுள்ளது. காரணம் லெபனானின் உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிஸ்புல்லாஹ்விற்கும் இஸ்ரேலுக்குமிடையே நடைபெற்ற போர் ஆகியனவாகும். வருகிற தினங்களில் ஹிஸ்புல்லாஹ் பொதுச்செயலாளர் நஸ்ரல்லாஹ்வின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இயக்கத்தின் புதிய அரசியல் அறிக்கையை வெளியிடுவார் என்றும் கருதப்படுகிறது.
நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ்வின் முந்தைய தலைவர் அப்பாஸ் மொஸ்ஸாவி இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமை பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹிஸ்புல்லாஹ் பொதுச்செயலளாரக ஹஸன் நஸ்ரல்லாஹ் மீண்டும் தேர்வு"
கருத்துரையிடுக