காஸ்ஸா: காஸ்ஸா கான் யூனூசிலிலுள்ள மிகப்பெரிய கட்டிடம் ஒன்றையும், இரண்டு சுரங்கங்களையும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது.
தாக்குதலில் 3 சிவிலியன்களுக்கு காயம் ஏற்பட்டதாக பிரஸ் டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. போர் விமானங்கள் மூலம் நடைபெற்ற இத்தாக்குதலில் ரஃபாவில் எகிப்தின் எல்லைபகுதியிலிலுள்ள இரண்டு சுரங்கப்பாதைகள் நாசமடைந்தது.
போராளி இயக்கமான இஸ்ஸத்தீன் கஸ்ஸாமின் நிலையங்களுக்கு நேராக எஃப்-16 விமானங்கள் மூலம் தாக்குதல் நடைபெற்றதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். சுரங்கப்பாதைகள் வழியாக ஃபலஸ்தீனர்கள் ஆயுதங்கள் கடத்துவதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரி கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்"
கருத்துரையிடுக