லண்டன்: ஈராக் போரைக்குறித்து முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் தவறான தகவல்களை அளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மூத்த ராணுவ அரசியல் தலைவர்களிடமிருந்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் டைலி டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் தலையிடும் விவகாரத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தையும் பிரிட்டன் மக்களையும் தவறான தகவல்களை தந்து புரியவைத்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிளேர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்பொழுது ஈராக் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் ஆயுதமில்லாமல் பிரச்சனையை தீர்ப்பதுதான் லட்சியம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் அதற்கு மாற்றமாக ஈராக் போர் துவங்கியவுடன் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டாளியாக மாறினார். ஈராக்கை ஆக்கிரமிக்க ஒரு வருடமாக முன்னேற்பாடுகளை பிரிட்டீஷ் அரசு மேற்க்கொண்டதாகவும் பிளேருக்கு இதில் பங்குண்டு என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஈராக்கில் போரின்போது பிரிட்டீஷ் படையினர் அமெரிக்க படையுடன் ஐக்கியத்துடன் செயல்படவில்லை என்று கூறும் டெய்லி டெலிகிராஃபின் அறிக்கை பிரிட்டீஷ் கமாண்டர்கள் அமெரிக்காவின் உத்தரவுகளை புறக்கணித்ததாகவும் இந்த கருத்துவேறுபாடு ஒரு வருடம் நீடித்ததாகவும் கூறுகிறது. 2003 மே முதல் 2004 மே வரை அமெரிக்க கமாண்டர்களுடன் இணைந்து ஈராக்கில் செயல்படவில்லை என்று மூத்த ராணுவ அதிகாரி கூறுகிறார்.
ஈராக்கில் பிரிட்டன் தலையிடுவதற்கு என்ன காரணம் என்ற சட்டரீதியான போர் நடந்துக்கொண்டிருக்கையில்தான் இந்த விசாரணை அறிக்கை முடிவடைந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தல் காரணமாக இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாது.
ஈராக் விவகாரத்தில் பிரிட்டன் தலையிட்டது பிளேரின் சொந்த விருப்பம் என்றும் அமெரிக்காவுடன் மோசமான கூட்டணியை அவர் வைத்திருந்ததாகவும் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹட்டன் விசாரணையில் தெளிவானது.
ஈராக் போரில் பிரிட்டனை உட்படுத்தியதை விமர்சித்த விஞ்ஞானி டேவிட் கெல்லி 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். ஈராக் விவகாரத்தில் பிரிட்டன் உளவு நிறுவனம் தவறான தகவல்களைத் தந்ததாகவும் அவசரமான அணுகுமுறையை மேற்க்கொண்டதாகவும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஈராக் யுத்தத்தின் காரணமாக அன்றைய ஐ.நா பொதுச்செயலாளர் கோஃபி அன்னனும், ஐ.நா ஆயுத சோதனையாளர் ஹான்ஸ் பிளிக்கும் விசாரணையின் நிழலில் உள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக் போர்: டோனி பிளேர் தவறான தகவல்களை தந்ததாக புதிய புலனாய்வு அறிக்கை"
கருத்துரையிடுக