துபாய் வேர்ல்டின் நீண்டகால வர்த்தக வெற்றியை குறிக்கோளாகக்கொண்டே புனர்நிர்மாண பணிகளை நடத்தியதாகவும் கடன் அளித்தவர்கள் அஞ்சத்தேவையில்லை எனவும் துபாய் அரசு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி செய்தி வெளிவந்தவுடன் துபாய் அரசிடமிருந்து வரும் முதல் அறிவிப்பாகும் இது.
துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷனின் கடன் அளவு 5900 கோடி டாலராகும். இதில் 1200 கோடி டாலர் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டவை. இதன் காரணமாகத்தான் உலக பங்குச்சந்தை ஆட்டங்காண ஆரம்பித்தது. துபாய் வேர்ல்டிற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அங்கு வாழும் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என கருதப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிகளை கட்டுப்படுத்தவும், மேற்பார்வையும் நிர்வகித்த நிறுவனங்களில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்ட புனர்நிர்மாணப்பணிகள்தான் பீதிக்கு காரணமாக கூறப்படுகிறது. இது இந்தியாவை பாதிக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர்.
துபாயில் முதலீடுச்செய்துள்ள நிறுவனம் எல் அண்ட் டி மட்டுமே என்று இவர்கள் சுட்டிக்காண்பிக்கிறார்கள். ஆனாலும் பங்குச்சந்தையில் இது பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்தது. அதேவேளையில் துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்காக இந்தியா அச்சப்பட தேவையில்லை என்று மத்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். துபாயுடன் இந்தியாவிற்கு பெரிய அளவிலான வர்த்தக தொடர்புகள் இல்லை. எனவே இது இந்தியாவை சிறிய அளவிலேயே பாதிக்கும் என பிரணாப் கூறினார்.
ஆனால் கேரள மாநில நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் கூறுகையில், "துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கேரளாவிற்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். துபாயின் கட்டுமான தொழில் இதனால் நிச்சயமற்ற தன்மையை சந்திப்பதால் மலையாளிகள் உட்பட பலருக்கும் வேலைவாய்ப்புகள் நஷ்டமாகும் சூழல் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கேரளாவின் மிகப்பெரிய திட்டங்களான வல்லார்பாடம் கண்டெய்னர் டெர்மினல், கொச்சி துறைமுக விரிவாக்கம், ஸ்மார்ட் சிட்டி ஆகியவை துபாயை எதிர்நோக்கியே உள்ளன. உலக பொருளாதார நெருக்கடி இதுவரை தீர்ந்துவிடவில்லை என்பதையே துபாய் பொருளாதார சிக்கல் சுட்டிக்காட்டுகிறது". இவ்வாறு அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியைத்தொடர்ந்து வளைகுடாவிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு உதவுவதற்காக நிதியுதவி திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்றும் ஐசக் மேலும் தெரிவித்தார்.
செய்தி:மலையாளமனோரமா
0 கருத்துகள்: on "துபாய் பொருளாதார நெருக்கடி: பீதி அடையவேண்டாம் துபாய் அரசு"
கருத்துரையிடுக