30 நவ., 2009

சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதற்கு பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு

ஜெனீவா: சுவிட்சர்லாந்தில் புதியதாக மஸ்ஜித் மினாராக்கள் நிர்மாணிப்பதற்கு எதிராக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளனர்.
மினாராக்கள் கட்டுவது சம்பந்தமாக பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பு பரிசோதனையில் 59 சதவீதம் பேர் மினாராக்களை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.

மினாராக்கள் இஸ்லாமிய மயமாக்கலின் அடையாளம் என்று குற்றஞ்சாட்டி சுவிஸின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் பீப்பிள்ஸ் பார்ட்டி பிரேரணையை முன்வைத்தது. மினாராக்களை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் கூறுகையில், "மினாராக்களை கட்டுவதை எதிர்ப்பது பாரபட்சமானது. இது மக்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளுக்கிடையேயான உறவை இது பாதிக்கும் என்பதால் அரசு மினாராக்களை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நான்கு லட்சம் முஸ்லிம் மக்கள் தொகையைக்கொண்ட சுவிட்சர்லாந்தில் வெறும் 4 மினாராக்கள் மட்டுமே உள்ளனர். வெளியே சத்தம் கேட்காதவாறுத்தான் "அதான்" கூறப்படுகிறது.

நாட்டின் 26 மாவட்டங்களில் பாதிக்குமேற்பட்டோர் மினாராக்கள் கட்டுவதற்கு எதிர்ப்புதெரிவிக்கும் சட்டத்தை ஆதரிப்பதாக தெரியவந்துள்ளது. சுவிஸ் நாட்டுச்சட்டப்படி பெரும்பான்மையான வாக்காளர்களும், பெரும்பான்மையான மாவட்டங்களும் அங்கீகரித்தால் அது சட்டமாக மாறும்.
மினாராக்களை தடைச்செய்வதை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எச்சரித்துள்ளது. "மினாராக்களை தடைச்செய்வது சுவிட்சர்லாந்தின் மத சுதந்திர உரிமைக்கு எதிரானது என்று கூறியுள்ளது. "மினாராக்களை நிர்மாணிப்பதை தடைச்செய்வது முஸ்லிம்களுக்கிடையில் பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கும்" என்று சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிக் ஓர்கனைசேசன் பெடரேசன் தலைவர் தானர் ஹதிபோக்லு கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதற்கு பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு"

கருத்துரையிடுக