லண்டன்: ஈரானில் அணுசத்தி உற்பத்திக்கான யுரேனியம் செரிவூட்டும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச அணுசக்திக் கமிஷனில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
வியன்னாவில் சர்வதேச அணுசக்தி கழகத்தின் 35 உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரி்க்கா, இந்தியாவைத் தவிர ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய முக்கிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிராக வாக்களித்துள்ளதால், இந்தியா -ஈரான் இடையிலான உறவுகள் பாதிக்கப்படாது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
source:inneram
0 கருத்துகள்: on "ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு"
கருத்துரையிடுக