24 நவ., 2009

காவல் மற்றும் பொதுப்பணிகளில் மதவாதிகளைக் களையெடுக்க வேண்டும்: லிபரான் அறிக்கை!

காவல் மற்றும் பொதுப் பணிகளில் மதவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்களைக் களையெடுக்க வேண்டும் என்றும் லிபரான் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் உதவியை நாட அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின் லாபம் தரும் எந்த அலுவலிலும் ஈடுபடத் தடை செய்ய வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பொது மற்றும் காவல் துறைக்கு பணி நியமணம் செய்யத் தேர்ந்து எடுக்கும் முறைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்றும் தற்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

காவல் மற்றும் அதிகார வர்கங்கள் மீது நம்பிக்கையின்மை காணப்படுவதாகக் கூறியுள்ள இவ்வறிக்கை, அதிகார வர்கங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள நீண்ட தொடர்பை துண்டித்து, ஒரு சமூக அக்கறையுள்ள காவல் மற்றும் அதிகாரவர்கங்களை உண்டாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்காக தொடர்ந்து எடுத்து வந்த முயற்சிகள் பற்றிய நீண்ட ஆய்வில் 21ஆம் நூற்றாண்டில் சட்ட அமலாக்கும் திட்டம் தவறியதால் தேசத்தில் சட்டமற்ற நிலை தொடர வாய்ப்பு அளித்துவிட்டதாக கூறியுள்ளது.

அரசியல்வாதிகளுக்கும், மதத்தலைவர்களுக்கும் அடிபணிந்து, அவர்களுடன் நெருங்கிய உறவு கொண்டுள்ள பொதுப்பணி மற்றும் காவல்துறை அதிகாரிகள், தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையை மறந்து நிறம் மாறுவது, ஒரு நல்ல ஆட்சிக்கு வெறுக்கதக்கச் செயலாகும் என்றும் லிபரான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காவல் மற்றும் பொதுப்பணிகளில் மதவாதிகளைக் களையெடுக்க வேண்டும்: லிபரான் அறிக்கை!"

கருத்துரையிடுக