நவம்பர் 5 அன்று கூடிய ஐ. நா சபையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இஸ்ரேல் காசாவிற்கு எதிராக மேற்கொண்ட போரில் போர் குற்றங்கள் நடந்து உள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் மேற்க்கொள்ளப்பட்டதாகவும் கூறும் அறிக்கையின் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விசாரணையை ஜெனிவாவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு ஹமாஸ் ஆட்சி செய்யும் காசா மற்றும் இஸ்ரேலில் மேற்கொள்ளும் என்று தீர்மானிக்கபட்டது. இதற்கு 144 நாடுகள் ஆதரவும் ,18 நாடுகள் எதிர்ப்பும் , 44 நாடுகள் நடுநிலையும் வகித்தன.
தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சட்ட நிபுணர் ரிச்சர்ட் கோல்ட்மன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இஸ்ரேல் மிக கொடுமையான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுவது; இஸ்ரேல் ராணுவத்தையும் ,தலைவர்களின் புகழை கெடுப்பதாகவும் உள்ளது என்று இஸ்ரேல் கூறி இருந்தது.
ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு பதில் அளித்த இஸ்ரேல் வெளியுறவு துறை; இஸ்ரேல் தன்னுடைய தற்காப்பு உரிமையை தொடர்ந்து செயல்படுத்துவதாகவும், உலகளாவிய தீவிரவாதத்திலிருந்து தன் நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவித்து உள்ளது.
source:khaleej times
0 கருத்துகள்: on "ஐ.நா சபையின் தீர்மானத்தை மறுத்தது இஸ்ரேல்"
கருத்துரையிடுக