நேற்று புதுடெல்லியில் இந்தியா இண்டர்நேசனல் சென்டரில் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பை அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்தார். சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத் வாழ்த்துரை வழங்கினார்.
தேசிய கமிட்டியின் பொறுப்பாளர்களாக முஹம்மது யூசுஃப்(தலைவர்), டாக்டர் ஸகாவுல் ஹுதா, பி.எ.ரவூஃப்(துணைத்தலைவர்கள்), அனீசுர்ரஹ்மான் (பொதுச்செயலாளர்), முஹம்மது ஷஹீன்,ஆஸிஃப் காஸி(செயலாளர்கள்), மதீன் அஹ்மத்(பொருளாளர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச்சார்ந்த 200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்துக்கொண்டனர். எக்னாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எடிட்டர் கவுதம் நவ்லாஹ கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் உரையாற்றும்போது, "இந்திய அரசு ராணுவத்தையும், துணை ராணுவத்தையும் உபயோகித்து நியாயமான காரணங்களுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறது. சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் கடந்த பிறகும் ராணுவத்தையோ அல்லது துணை ராணுவத்தையோ பயன்படுத்தாத வருடங்களே இல்லை. சொந்த பூமிக்காக போராடும் மலைவாசி மக்களையும், ஆதிவாசிகளையும் இந்திய அரசு எதிரிகளாக அறிவித்துள்ளது." என்று கூறினார்.
மதியத்திற்கு பின் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பிரபல வரலாற்று ஆசிரியரான தனிக்கா சர்க்கார் கூறும்போது, "ஹிந்துத்வா அமைப்புகளின் செயல்பாடுகள்தான் மிகவும் ஆபத்தான ஒன்று" என்று குறிப்பிட்டார்.தேஜஸ் பத்திரிகை ஆசிரியர் பேராசிரியர் பி.கோயா, அனீஸ் அஹ்மத் மாங்களூர் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
செய்தி ஆதாரம்: தேஜஸ்
0 கருத்துகள்: on "கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய இயக்கமாக மாறியது"
கருத்துரையிடுக