காபூல்:ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மையான மக்களும் விரும்புவது தாலிபானுடன் திருப்தியளிக்குவகையிலான பேச்சுவார்த்தையைத்தான் என்று நியூயார்க் டைம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராணுவரீதியாக தாலிபான்களை ஆக்கிரமிப்பு படையினரால் தோற்கடிக்க இயலாது என்று ஆப்கான் மக்கள் கருதுவதாக ஆய்வில் தெளிவானது என நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு படையினர் என்ன சாதித்தனர்? என 60 வயதான அப்துல்லா வஸாய் கேட்கிறார். சரிகார் நகரத்தில் மருந்துவியாபாரியாக இருக்கிறார் இவர். தங்களுடைய விமானத்திலிருந்து பார்த்தால் 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கோழி முட்டையை க்கூட காண இயலும் என்று பெருமை பேசும் அமெரிக்க ராணுவத்தினருக்கு தாலிபான் போராளிகளை ஏன் காணமுடியவில்லை என கிண்டலாக அவர் கேட்கிறார். காபூலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அனைவருடைய கருத்தும் இதுதான். ஆக்கிரமிப்பின் துவக்கத்தில் தாலிபான் ஆட்சியை தகர்த்த அமெரிக்காவுக்கு தற்போது 60 ஆயிரம் ராணுவவீரர்களை கொண்டிருந்த போதிலும் தாலிபான்களை தோற்கடிக்க இயலாது என காபூல் பல்கலைகழக மாணவர் முஹம்மது ஷாஃபி கூறினார்.
ராணுவ நடவடிக்கைகளில் அப்பாவிமக்கள் அதிகம் கொல்லப்பட்டது மக்களுக்கு அமெரிக்காவுக்கு எதிரான கோபத்தை மூட்டியுள்ளது. கடந்த வாரம் வார்டக் மாகாணத்தில் அமெரிக்க ராணுவம் குர்ஆனை எரித்த நிகழ்வின் தொடர்ச்சியாக எழுந்த ஆவேசம் இதுவரை அடங்கவில்லை.தாலிபான் மக்கள் ஆதரவோடு வலுப்பெற்ற சூழலில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் சிறந்தது என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர். அதிகமான ராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவது என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை ஆப்கான் மக்கள் பீதியுடன் பார்க்கின்றனர்.
செய்தி ஆதாரம்:தேஜஸ்
0 கருத்துகள்: on "தாலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்: பெரும்பான்மையான ஆப்கான் மக்கள் விருப்பம்"
கருத்துரையிடுக