மும்பை: மும்பையில் ஐ.பி.என் தொலைக்காட்சி நிறுவன அலுவலகங்களில் தாக்குதல் நடத்திய சிவசேனா குண்டர்கள் அங்கு பணியிலிருந்த ஊடக பணியாளர்களை தாக்கியும் பொருள்களுக்கு சேதத்தையும் ஏற்படுத்தினர்.
ஐ.பி.என் தொலைக்காட்சியின் ஹிந்தி, மராத்தி அலைவரிசைகளான ஐ.பி.என் 7, ஐ.பி.என் லோக்மத் ஆகிய அலுவலகங்கள் தாக்குதலுக்கு ஆளாகின. அலுவலகங்களில் அத்துமீறி நுழைந்த சிவசேனாவைச்சேர்ந்தவர்கள் அங்கிருந்த ஊடக பணியாளர்களை தாக்கியும் அவர்களின் ஆடைகளை கிழித்தும் எறிந்தனர்.
சிவசேனாவிற்கு எதிராக செய்தி வெளியிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியதாக பணியிலிருந்தவர்கள் கூறினர். தாக்குதலுடன் தொடர்புடைய 7 சிவசேனா குண்டர்களை காவல்துறை கைதுச்செய்துள்ளது.
புனேயில் ஐ,பி.என் 7 இன் ஒ.பி.வேன் மீது தாக்குதல் நடத்தி அலுவலகம் மீது கல்லெறிந்த 8 சிவசேனாவைச்சார்ந்தவர்களை போலீஸ் கைதுச்செய்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஐ.பி.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது சிவசேனா குண்டர்கள் தாக்குதல்"
கருத்துரையிடுக