சிவசேனாவுக்கு வழங்கியிருக்கும் அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்றும், அக்கட்சியின் பத்திரிகையான சாம்னாவை தடை செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் கோரி உள்ளனர். ஐ.பி.என். லோக்மாட் தொலைக்காட்சி மீது சிவசேனா கட்சியினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற எதிர்ப்பு கூட்டத்தின் போது இக்கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன.
பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா ஒருங்கிணைந்த இந்த கூட்டத்திற்கு அனைத்து ஊடகங்களிலிருந்தும் செய்தியாளர்கள் வந்திருந்தனர். சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் வினய் திவாரி, ஐபிஎன் 7 தொலைக்காட்சியின் பிரபால் பிரதாப் சிங் மற்றும் எம்.கே. ஜா, சிஎன்பிசி 18 தொலைக்காட்சியின் பொருளாதார ஆசிரியர் விவியன் பெர்ணான்டஸ் மற்றும் மனித உரிமை ஆர்வலர் கெளதம் நவ்லகா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற செய்தியாளர்கள் சாம்னா பத்திரிகையை தடை செய்ய வேண்டும் என்று கோரினர். மேலும் சிவ சேனா கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்.
பிரஸ் கவுன்சில் சார்பில் அதன் பொதுச் செயலாளர் புஷ்பேந்திரா மற்றும் அதன் தலைவர் பர்வேஸ் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஊடகங்கள் மீது நடத்தப்படும் அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் திவாரி கேட்டுக் கொண்டார்.
source:inneram
0 கருத்துகள்: on "சாம்னாவை தடை செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை!"
கருத்துரையிடுக