புதுடெல்லி: தீவிரவாதத்திற்கு காரணம் முஸ்லிம்களில் வஹ்ஹாபிகள் (ஸலஃபிகள்) தான் காரணம் என்று மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானியின் விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கான சவூதி அரேபியாவின் தூதர் ஃபைசல் அல் திராத் சர்வதேச சட்டவல்லுநர்களின் மாநாட்டிலிருந்து உடனடியாக வெளிநடப்புச்செய்தார்.
வஹ்ஹாபி தீவிரவாதம்தான் இளைஞர்களுக்கு தீவிரவாதத்தை கற்றுக்கொடுக்கின்றது. வஹ்ஹாபி தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாட்டுடன் இந்தியா நல்லுறவு பேணுவதாகவும் ராம் ஜெத்மலானி குற்றஞ்சாட்டினார்.
ராம் ஜெத்மலானியின் இந்த விமர்சனத்தை கண்டித்து இந்தியாவில் சவூதி அரேபியாவின் தூதர் ஃபைசல் அல் திராத் உடனடியாக அவையை விட்டு வெளியேறினார். ஜெத்மலானியின் இந்த விமர்சனம் அரசுக்குரியதல்ல என்று சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெளிவாக்கியதைத்தொடர்ந்து சவூதி தூதர் அவைக்கு திரும்பி வந்ததாக நிகழ்ச்சி அமைப்பாளர் ஆதேஷ் அகர்வாலா தெரிவித்தார்.
தீவிரவாதத்திற்காக எந்தவொரு மதத்தையும் குற்றஞ்சுமத்தக்கூடாது என்று மொய்லி மேலும் கூறினார். தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தை மட்டும் குறைசொல்வது தவறு என்றும் ஹிந்துத்தீவிரவாதிகளும் புத்த தீவிரவாதிகளும் இங்குண்டு என்றும் ஜெத்மலானி கூறினார். அணிசேராக்கொள்கையும், பஞ்சசீலக்கொள்கையும் பிசாசுத்தனமானது என்று கூறிய அதற்கெதிராக போராட நன்மைகளின் சக்திகளுடன் நாடு கூட்டுவைக்கவேண்டும் என்றும் கூறினார்.
எதிரிகளுடனான கூட்டை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் தீவிரவாத்த்தை ஆதரிக்கும் நாட்டுடனான எரிவாயு திட்டத்திற்கு இந்நாடு திட்டம் தீட்டுகிறது என்று ஜெத்மலானி குற்றஞ்சாட்டினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "வஹ்ஹாபிகளுக்கெதிரான (ஸலஃபிகள்) ஜெத்மலானியின் விமர்சனம்: சவூதி அரேபியா தூதர் உடனடியாக வெளிநடப்புச்செய்தார்"
கருத்துரையிடுக