மும்பைத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரேவின் ‘புல்லட் புரூஃப்’ உடையை குண்டுகள் துளைக்கவில்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், “புல்லட் புரூஃப் கவச உடைகள் தரமற்றதாக இருந்ததால், அவற்றில் துப்பாக்கி குண்டுகள் ஊடுவிச் சென்று கார்கரேவின் உயிரை பலிகொண்டதாக” கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்ட கருத்து தவறானது என தற்போது வெளியாகியுள்ள கார்கரேவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்கரே அணிந்திருந்த கவச உடையை குண்டுகள் துளைக்கவில்லை; மாறாக அவரது தோள்பட்டையில் இருந்து தலைக்கு இடையிலான கழுத்துப் பகுதியில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளது. இதன் காரணமாகவே கார்கரே உயிரிழந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், “புல்லட் புரூஃப் கவச உடைகள் வடிவமைப்பு விதிகளின்படி, அவை ஒருவரின் கழுத்து முதல் இடுப்புப் பகுதி வரை குண்டு துளைக்காத வகையில் பாதுகாக்க வேண்டும். ஆனால் கார்கரே விவகாரத்தில், அவர் அணிந்திருந்த கவச உடை மார்புப் பகுதியை மட்டுமே மறைக்கும் வகையில் இருந்தது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
source:webdunia
0 கருத்துகள்: on "கார்கரே ‘புல்லட் புரூஃப்’ உடையை குண்டு துளைக்கவில்லை: பிரேதப் பரிசோதனை அறிக்கை"
கருத்துரையிடுக