ட்ரஸ்டன்: கர்ப்பிணியான எகிப்தைச்சார்ந்த மர்வா அல் ஸெர்பினியை இஸ்லாமோஃபோபியா காரணமாக ஜெர்மன் நீதிமன்றத்தில் வைத்து கத்தியால் குத்திக்கொன்ற ஜெர்மனைச் சார்ந்த அலக்சாண்டர் வைன்ஸுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி நீதிமன்ற அறையில் வைத்து மர்வாவை குத்திக்கொன்றதை வையின்ஸ் ஒத்துக்கொண்டான். ஆனால் அது முன்னரே திட்டமிடப்பட்டதோ அல்லது இனவெறியோ அல்ல என்று கூறினான்.
நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தவர்கள் ஜெர்மனி இஸ்லாம் விரோதபோக்கை நிறுத்தவும், மர்வாவின் மரணம் இஸ்லாத்தை வேட்டையாடுவதற்கு கிடைத்த பலன் என்று கோஷமிட்டனர். முஸ்லிம் விரோதப்போக்குதான் மர்வாவின் மரணத்திற்கு காரணம் என ப்ராஸிக்யூட்டர் ப்ராங்க் ஹெயின் ரிச் கூறினார்.
2008 ஆம் ஆண்டு ஹிஜாப் அணிந்ததை அவமானப்படுத்திய வையின்ஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மர்வா அதன் வழக்கு விசாரணைக்கு கடந்த ஜூலை 1 ஆம் தேதி ட்ரஸ்டன் நீதிமன்றத்திற்கு வந்தபோது வையின்ஸ் மறைத்துவைத்திருந்த கத்தியின் மூலம் 16 முறை குத்தி மர்வாவை கொலைச்செய்தான். இதனை தடுக்க முயன்ற அவருடைய கணவருக்கு காயம் ஏற்பட்டது. மர்வாவை முஸ்லிம் உலகம் ஹிஜாபிற்கான ஷஹீத் என்று அழைக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மர்வா அல் ஸெர்பினியை கொன்றவனுக்கு ஆயுள்தண்டனை"
கருத்துரையிடுக