ரமல்லா: நாற்பது ஆண்டுகாலம் சுதந்திர ஃபாலஸ்தீன் உருவாக்கவேண்டும் என்ற கனவோடு போராடிய ஃபலஸ்தீன் விடுதலை முன்னணி தலைவர் யாஸிர் அரஃபாத்தின் நினைவுதினத்தில் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் ரமல்லாவில் ஒன்று கூடினர்.
வரலாற்று நாயகனான யாஸிர் அரஃபாத்தின் 5வது நினவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அரஃபாத் துவங்கிவைத்த சுதந்திர நாட்டிற்கான போராட்டம் தொடரும் என்று ஒன்று கூடிய மக்கள் பிரகடனம் செய்தனர்.
ஃபலஸ்தீன் பிரதேசங்களில் அத்துமீறி நுழைந்து குடியிருப்புகளை கட்டி வரும் இஸ்ரேலை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மஹ்மூத் அப்பாஸ் கடுமையாக விமர்சித்தார். ஃபலஸ்தீன் பூமியை அபகரித்து கட்டிடங்கள் கட்டி ஜெருசலத்தை யூதபிரதேசமாக மாற்ற முயலும் இஸ்ரேல்தான் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும் என்று அப்பாஸ் உரையாற்றினார். 1967 ஆண்டிற்கு முன்பிருந்த எல்லைகளுக்கு இஸ்ரேல் திரும்பிபோகாமல் சமாதானத்திற்கு சாத்தியமில்லை என்று கூறிய அப்பாஸ் கஸ்ஸாவில் ஆட்சிபுரியும் ஹமாஸுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
ஃபலஸ்தீன் அதாரிட்டி அதிபராக தொடர்வதில்லை என்று நேற்று முன்தினம் அப்பாஸ் அறிவித்திருந்தார்.
35 ஆண்டுகள் ஃபலஸ்தீன் விடுதலை முன்னணியின் தலைவராக செயல்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான இன்திஃபாழாவுக்கு தலைமைதாங்கிய அரஃபாத்தை அக்காலக்கட்டத்தில் ஃபலஸ்தீன் விடுதலைப்போராட்டத்தின் சின்னமாக உலகம் பார்த்தது. பின்னர் அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு கட்டுபட்டு ஓஸ்லோ ஒப்பந்தத்தத்தை மேற்க்கொண்ட அரஃபாத் பெயரளவிலான அதிகாரங்களுடன் ஃபலஸ்தீன் அதாரிட்டியின் அதிபரானார். 2004 ஆம் ஆண்டு பிரான்ஸில் வைத்து தமது 75 ஆவது வயதில் மரணமடைந்தார் யாஸிர் அரஃபாத். இஸ்ரேல் விஷம் வைத்து அரஃபாத்தை கொலைச்செய்ததாக செய்திகள் வெளிவந்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹமாஸுடன் சமாதானத்திற்கு தயார்: யாஸிர் அரஃபாத் நினைவுதினத்தில் மஹ்மூத் அப்பாஸ் அறிவிப்பு"
கருத்துரையிடுக