கொச்சி:"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் எந்தவொரு இயக்கமும் இல்லை என்று கேரள மாநில டி.ஜி.பி ஜேக்கப் பூணூஸ் நீதிமன்றத்தில் தெளிவுபட கூறினார்.
இவ்விஷயம் தொடர்பாக 18 விசாரணைக்குறிப்புகள் அடங்கிய முத்திரைவைக்கப்பட்ட உறையில் வைத்து ப்ராஸிக்யூசன்ஸ் டைரக்டர் ஜெனரல் வி.ஜி.கோவிந்தன் நாயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் கமிஷனர்கள் அடங்கிய குழு விசாரித்த அறிக்கையைத்தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மூன்று அறிக்கைகளில் பெண்களை காதலித்து மதமாற்ற சில இயக்கங்கள் முயல்வதாக உறுதிச்செய்யப்படாத அறிக்கைகள் உண்டு என்று குற்றஞ்சாட்டப்பட்டபோதிலும் இதற்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என்று டி.ஜி.பி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெளிவுபட கூறியுள்ளார். கேள்விகள் மூலம் பெறப்பட்ட தகவல் மட்டுமே இதில் அடங்கியுள்ளது ஆதலால் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் டி.ஜி.பி தெரிவித்தார்.
"லவ் ஜிஹாத்" பற்றி அறிக்கை சமர்ப்பிக்க உளவுத்துறைக்கு இரண்டு வார அவகாசத்தை நீதிபதி அளித்தார். பத்தணம் திட்டை என்ற இடத்தில் இரண்டு எம்.பி.ஏ பயிலும் மாணவிகளை காதலித்து மதமாற்ற கடத்திச்சென்றார்கள் என்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்தணம் திட்டையைச்சார்ந்த ஷாஹன்சா, சிராஜுதீன் ஆகியோர் சமர்ப்பித்த முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் பரிசீலித்தது. ஜாமீன் மனுவை வாபஸ்பெற இருவரும் அனுமதி கோரியபோது நீதிமன்றன் அதனை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என்று சுட்டிக்காட்டி பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on ""லவ் ஜிஹாத்" ஆதாரமில்லை மீண்டும் கூறுகிறார் கேரள மாநில டி.ஜி.பி"
கருத்துரையிடுக