வாஷிங்டன்:இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த லஷ்கர் இ தய்யிபாவைச்சார்ந்த அமெரிக்க குடிமகன் டேவிட் கோல்மன் ஹெட்லியை விசாரணை நடத்தாமலேயே இந்திய புலனாய்வு குழுவினர் அமெரிக்காவிலிருந்து திரும்பினர்.
நடவடிக்கை முயற்சிகளில் தொழில்நுட்ப பிரச்சனையின் காரணமாக ஹெட்லியை விசாரணை செய்ய இயலவில்லை என ஐ.பி மற்றும் ரா உளவுத்துறையைச்சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஹெட்லி தற்ப்பொழுது சிகாகோ சிறையில் உள்ளார்.
டெல்லியில் நேசனல் டிஃபன்ஸ் ஸ்கூல்,டேராடூனில் பப்ளிக் ஸ்கூல்,மசூரியில் வுட் ஸ்டாக் ஸ்கூல் ஆகியவற்றை தகர்ப்பதற்கு ஹெட்லி திட்டமிட்டதாக கூறி எஃப்.பி.ஐ அவரை கைதுச்செய்தது. இந்தமாதம் 1 ஆம் தேதி வாஷிங்டன் சென்ற இந்திய குழு மறுநாளே ஹெட்லியை விசாரணை செய்வதாக இருந்தது. அமெரிக்காவில் வாஷிங்டனில் மட்டும் ஒரு வாரத்தை செலவழித்த இந்திய குழு ஹெட்லியை விசாரிக்க சிகாகோ செல்லாமலேயே நியூயார்க் திரும்பியது.
நபி(ஸல்...) அவர்களை பற்றி கேலிச்சித்திரம் வரைந்து வெளியிட்ட டென்மார்க் பத்திரிகையான ஜில்லன்ட் போஸ்ட் மீது தாக்குதல் நடத்த ஹெட்லி திட்டமிட்டிருந்ததாக எஃப்.பி.ஐ தெரிவித்திருந்தது. உண்மை நிலவரம் இறைவனுக்கே வெளிச்சம்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹெட்லியிடம் விசாரணை மேற்க்கொள்ளாமல் இந்திய புலனாய்வு குழு திரும்பியது"
கருத்துரையிடுக