லண்டன்: ஆப்கானிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறும் காலக்கட்டத்தை முடிவுச்செய்ய அடுத்த ஆண்டு சர்வதேச நாடுகளின் மாநாட்டை கூட்டப்போவதாக பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு பிரிட்டனில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆப்கானில் பிரிட்டன் ராணுவத்தை அனுப்பியதைக்குறித்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு ராணுவத்தை வாபஸ்பெறுவதற்கான காலக்கட்டத்தை முடிவுச்செய்ய நேட்டோ நாடுகளின் மாநாட்டை லண்டனில் கூட்டுவதுதான் பிரிட்டன் பிரதமரின் திட்டம். ஆப்கானில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆப்கன் ராணுவத்திடம் கட்டுப்பாட்டை அளித்துவிட்டு வாபஸ்பெறுவதுதான் திட்டம் என்று லண்டன் லார்டு மேயர்களின் ஆண்டுவிழா விருந்தில் கலந்துக்கொண்டு வெளிநாட்டுக்கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றும்போது பிரவுன் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை வாபஸ்பெறவேண்டும் என்று 42 நாடுகளிலிருந்து கோரிக்கைகள் வலுவடைந்துள்ளதாக பிரவுன் அறிவித்தார். இந்த 42 நாடுகளிலிருந்து 1 லட்சத்திற்குமேற்பட்ட ராணுவத்தினர் ஆப்கானில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2001 ஆம் ஆண்டு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நேசநாடுகளின் உதவியுடன் அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தது. தாலிபானை துரத்துவதற்கு என்ற லட்சியத்துடன் களமிறங்கிய பிரிட்டன் தற்போது அவர்களுடன் ரகசியமாக சமரசம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
9 ஆயிரம் பிரிட்டீஷ் ராணுவத்தினர் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளனர். இதில் 2009 ஆம் ஆண்டு மட்டும் 230 பிரிட்டீஷ் ராணுவத்தினர் கொல்லபட்டுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானிலிருந்து ராணுவம் வாபஸ் சம்பந்தமாக சர்வதேசநாடுகளின் மாநாட்டை கூட்டப்போவதாக பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு"
கருத்துரையிடுக