புதுடெல்லி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை புனர் ஆரம்பிப்பதாக மத்திய வெளிநாட்டுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தின் பரிந்துரையில் உள்ள இந்தச்சட்டத்தில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றும் காலம் தாழ்த்தாமல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கேரளாவைச்சார்ந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான அமைப்பான NORKA(Non Residents Keralites Affairs) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு இதனை வயலார் ரவி அறிவித்தார். இந்தச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதைக்குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையின்போது NORKA செயலாளர் ஷீலா தோமஸ், துணைத்தலைவர் எம்.எ.யூசுஃப் அலி, இயக்குநர்களான அலி எம்.எல்.ஏ, கெ.டி.ஜலீல் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்றனர்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை, வெளிநாட்டு தூதரகங்களில் தேவையான பணியாளர்களை நியமிப்பது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அந்தபகுதிகளிலிலுள்ள தூதரகங்களிலேயே பதிவுச்செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், மரணமடைந்தவர்களின் உடல்களை இந்தியன் ஏர்லைன்ஸ் வெளிநாட்டிலிருந்து குறைந்த செலவில் கொண்டுவருவதைப்போல பிற விமானங்களும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொள்தல், வெளிநாட்டு இந்தியர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு நிதியுதவிச்செய்தல் போன்ற கோரிக்கைகளை NORKA பிரநிதிகள் பேச்சுவார்த்தையின்போது முன்வைத்த கோரிக்கைகளாகும்.
வாக்குரிமை என்ற வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான நீண்டகால கனவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துச்சென்றால் லட்சக்கணக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பயன்மிக்கதாக மாறும்.
வெளிநாடுகளில் தண்டனைக்காலம் முடிந்தபிறகும் சிறைகளில் தவிக்கும் இந்தியர்களின் பிரச்சனைகளை மிக்க அவசர பிரச்சனையாக கவனத்தில்கொள்வதாகவும், இத்தகைய மனித உரிமை பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கைகளை வேகமாக எடுக்கமுயல்வதாகவும் வயலார் ரவி அறிவித்தார்.
செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "வெளிநாட்டு இந்தியர்களுக்கு வாக்குரிமைச்சட்டம் உடன் நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர் வயலார் ரவி"
கருத்துரையிடுக