சுவிட்சர்லாந்து நீதித்துறை அமைச்சர் எவ்லைன் விட்மர் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை சுவிட்சர்லாந்தில் தடை செய்வது பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அதிகமானவர்கள் பர்தா அணிய ஆரம்பித்தால் அதனை தடை செய்வது பற்றி பரிசீலனை செய்யப்படும் என அவர் கூறியிருந்தார்.
தற்போது ஜெனிவாவில் சுவிட்சர்லாந்து பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசும்போது தனது கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டதாக தெரிவித்தார். தான் ஒரு ஐரோப்பிய பெண்ணாக இருப்பதால், பர்தாவை ஒரு மதச் சின்னமாக அணிவதில் தனக்கு மாறுபட்ட கருத்திருந்தாலும், தற்போது சில பெண்களே அணிவதால் அதனைப்பற்றி கவலை கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் வணக்கத்தலங்களான மசூதிகளில் உள்ள மினாரா எனப்படும் கோபுரங்களை தடை செய்யும் கோரிக்கைக்கு அரசாங்கம் எதிராகவே உள்ளது என குறிப்பிட்ட எவ்லைன் இவ்வாறு செய்வது மத உரிமைகளை மீறும் செயல் என தெரிவித்தார். மினாராக்களை தடை செய்வது சம்பந்தமான மக்களின் எண்ணத்தை அறியும் ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 29 அன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
source:inneram
0 கருத்துகள்: on "பர்தாவை தடை செய்வது பற்றி கருத்து: சுவிஸ் அமைச்சரின் அந்தர் பல்டி"
கருத்துரையிடுக