காபூல்: தாலிபான்களுக்கெதிராக ஆப்கானில் பிரெஞ்சுப்படையினர் ஆரம்பித்த ராணுவ நடவடிக்கையில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு காபூலிலுள்ள ஒரு சந்தையை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தினர் பிரெஞ்சுப்படையினர். இதில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பெண்கள் உட்பட 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஆப்கான் பழங்குடியின தலைவர்களின் கூட்டம் நடப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே தாக்குதல் நடத்தியதாக பிரஞ்சு ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் பழங்குடியனதலைவர்களின் மாநாட்டில் பிரஞ்சு ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர், ஆனால் இவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
100 ஆப்கன் ராணுவ வீரர்களுடன் இணைந்து 700 பேர்களைக் கொண்ட பிரெஞ்சு ராணுவப்படையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர். போக்குவரத்து துறையை பாதுகாப்பதற்காக ஐரோப்பியன் யூனியனின் ஆதரவோடுதான் இந்த ராணுவ நடவடிக்கை துவங்கியுள்ளதாக பிரெஞ்சு ராணுவ உயர் அதிகாரி பிரான்சிஸ் சான்ஸன் கூறியுள்ளார். இதற்கிடையே காந்தஹார் போலீஸ் செக்போஸ்ட் மீது தாக்குதல் நடத்திய போராளிகள் 8 ஆப்கான் போலீசாரைக்கொன்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று அதிகாலை அர்கன்தாப் மாகாணத்தில்தான் இத்தாக்குதல் நடைபெற்றது. 3 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சண்டை பல மணி நேரம் நீண்டதாகவும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையை பற்றி தகவல் சேகரிப்பதாகவும் போலீஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தான்: பிரஞ்சுப்படையினர் 3 குழந்தைகளை கொன்றனர்"
கருத்துரையிடுக