டெல் அவீவ்: சுதந்திர நாட்டிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலை அணுகுவது என்ற ஃபலஸ்தீன மக்களின் முயற்சிகளுக்கு இஸ்ரேல் முன்னறிவிப்பு செய்துள்ளது.
ஐ.நா வை அணுகுவதற்கான முயற்சி ஒருபோது இருநாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாகாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஃபலஸ்தீனர்களின் ஒரு தலைபட்சமான போக்கு அமெரிக்காவுடனான உடன்படிக்கையை முறிக்கச்செய்யும், அந்த சூழலில் நாங்கள் எங்களது வழியில் செல்ல நேரிடும் என்று கூறியுள்ளார். எந்த நடவடிக்கையை இஸ்ரேல் மேற்க்கொள்ளும் என்பதை நெதன்யாகு வெளிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் ஃபலஸ்தீனர்கள் தங்கள் வழியில் சென்றால் இடைக்கால ஒப்பந்தத்தை ரத்துச்செய்யப்போவதாக இஸ்ரேல் சட்ட வல்லுநர் ரோபி ஸாபேல் கூறியுள்ளார்.
எல்லாவிதமான சமாதான நடவடிக்கைகளுக்கும் இஸ்ரேல் தடையாக இருந்தால் சுதந்திர ஃபலஸ்தீன் பிரகடனத்திற்காக ஐ.நாவை சமீபிக்கப்போவதாக ஃபலஸ்தீன் தலைவர் ஸாஇப் எராக்கத் நேற்று முன்தினம் அறிவித்ததே இஸ்ரேலின் கோபத்திற்கு காரணம்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஃபலஸ்தீன் நாடு பிரகடனம்: ஃபலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்"
கருத்துரையிடுக