17 நவ., 2009

மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது: சச்சின், கிரிக்கெட்டில் மட்டும் கவனத்தை செலுத்தினால் போதும்: பால்தாக்கரே

புதுடெல்லி:மும்பை அனைத்து இந்திய மக்களுக்கும் சொந்தமானது என இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று நாயகனான சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
சச்சினின் இந்தக்கூற்றுக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். சச்சின் மராத்திகளின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அரசியல் களத்தில் இறங்குவதற்கு முயற்சிச்செய்வதாகவும் குற்றஞ்சாட்டிய பால்தாக்கரே சச்சின் விளையாட்டில் மட்டும் கவனத்தை செலுத்தினால் போதும் என்று கூறியுள்ளார்.
“ஒரு மஹாராஷ்ட்ராவைச்சார்ந்தவன் என்பதில் எனக்கு பெருமைதான். ஆனால் அதையெல்லாம் விட நான் ஒரு இந்தியன். மும்பை எல்லா இந்தியமக்களுக்கும் சொந்தமானது.” என்றுசர்வதேச கிரிக்கெட் உலகில் தமது 20 ஆண்டை தொட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் மும்பையில் பத்திரிகையாளர்களோடு பேசுகையில் தெரிவித்தார்.
சச்சின் கூறிய இந்த வார்த்தைகள்தான் சிவசேனா தலைவன் பால்தாக்கரேயை சினமூட்டியுள்ளது. ஆனால் தனது கவனம் கிரிக்கெட்டில் மட்டுமே என்றும் சர்ச்சைகளில் நான் தலையிடவிரும்பவில்லை என்றும் சச்சின் தெரிவித்திருந்தார். இதுபற்றி மேலும் தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையில் எழுதிய பால்தாக்கரே, "சச்சினின் இத்தகைய பேட்டி தேவையில்லாத ரன்னுக்காக ஓடி அவுட்டாகுவது போல் உள்ளது. இது சச்சினை மராத்திகளின் மனங்களிலிருந்து வெளியேற்றிவிடும். நூற்றுக்கணக்கான மராத்திகள் உயிரை தியாகம் செய்து மும்பையை சொந்தமாக்கியது அன்றையகாலத்தில் பிறக்காத சச்சினால் புரிந்துக்கொள்ள இயலாது எனவேதான் அவர் இம்மாதிரியான பேட்டிகளை அளிக்கிறார்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் சச்சினை விமர்சித்த தாக்கரேக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், இந்திய கிரிக்கெட் போர்டும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. சச்சினுக்கெதிரான பால்தாக்கரேயின் விமர்சனம் தேவையற்ற ஒன்று என்று இந்திய கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.சச்சின் கூறியது முற்றிலும் சரியானது.அதில் எவர்க்கும் எதிர்ப்பு இல்லை. சச்சின் இந்தியாவின் பெருமைக்குரியவர். இந்தியக்காரன் என்பதால் அவர் பெருமைப்படுகிறார் என்று பா.ஜா.க வின் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஆனால் பால்தாக்கரேயின் விமர்சனத்திற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ஜெட்லி.
சச்சினின் இப்பேட்டி இதயத்திலிருந்து வெளிப்பட்ட ஒன்று. மஹாராஷ்ட்ராவைச் சார்ந்த சச்சின் இந்தியாவிற்காக ஆடுகிறார். இது இந்தியாவின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என மஹாராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது: சச்சின், கிரிக்கெட்டில் மட்டும் கவனத்தை செலுத்தினால் போதும்: பால்தாக்கரே"

கருத்துரையிடுக