இஸ்லாமாபாத்: எட்டு வருடம் நீண்ட இரத்தகளரி நிறைந்த ஆக்கிரமிப்பு போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா முயன்றுவருவதாக பாகிஸ்தான் பத்திரிகையான டாண் செய்தி வெளியிட்டுள்ளது.
தாலிபான்களுடன் சவூதி அரேபியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடைய உதவியுடன் ரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுதான் அமெரிக்காவின் திட்டம். சவூதி மற்றும் பாகிஸ்தானைச்சார்ந்த ஒரு அரசு அதிகாரி வீதமும்,சவூதி அரேபியாவின் உளவு அமைப்பான ஜி.ஐ.டி மற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யின் அதிகாரி ஒருவர் வீதமும் இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமைவகிப்பர். அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ வின் கட்டளைபடி இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
தாலிபான் தலைவர் முல்லா உமரின் நெருங்கிய நெருங்கிய ஆதரவாளரான அஹா முஃதஸிமுடனும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துமென்றும் ஆனால் இது ஈத்-உல்-அழ்ஹாவிற்கு பிறகு என்றும் டான் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கான்: தாலிபானுடன் ரகசிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயார்"
கருத்துரையிடுக