14 நவ., 2009

சர்க்கரை நோய்க்கெதிராக துபாயில் நீல நிற பேரணி

துபாய்: அதிகரித்து வரும் சர்க்கரை நோய்க்கெதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஒரு வருடம் முழுவதும் நீடிக்கும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக நேற்று துபாயில் நீல நிற பேரணி நடைபெற்றது.


சேஹ் சயீத் சாலையிலிலுள்ள ஒயாசிஸ் சென்டரிலிருந்து நீல நிறத்திலான டி சர்ட்டும், தொப்பியும் அணிந்து பாண்டு வாத்தியங்கள் பாடல்களுடன் பேரணி துவங்கியது. பல்வேறு ஆரோக்கிய நிறுவனங்கள், கிளப்புகள், பிரபல தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆதரவோடு இந்த பேரணி நடைபெற்றது.


சர்க்கரை நோய்க்கான சிகிட்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் 37 கோடியே 40 லட்சம் திர்ஹம் செலவிடப்படுகிறது. 2009-10 ஆண்டை சர்க்கரை நோயை எதிர்க்கொள்வதற்கான ஆண்டாக கடைபிடிக்க தீர்மானித்ததாக ஐக்கிய அரபு அமீரக உடல்நலத்துறை ஹனீஃப் ஹஸ்ஸன் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்க்கரை நோய்க்கெதிராக துபாயில் நீல நிற பேரணி"

கருத்துரையிடுக