நியூயார்க்:எதிர்பாராத வகையில் அமெரிக்காவில் நான்கு முஸ்லிம் பள்ளிவாசல்களையும், முஸ்லிம் நிறுவனமொன்றின் 36 மாடி கட்டிடத்தையும் கைப்பற்றும் அமெரிக்க அரசின் நடவடிக்க துவங்கியுள்ளது.
ஈரான் அரசுடன் தொடர்பு என்று குற்றச்சாட்டை முன்வைத்து ஒபாமா அரசு ஷியா பள்ளிவாசல்களையும், அலவி பவுண்டேசன் என்ற முஸ்லிம் நிறுவனமொன்றின் 36 மாடிக்கட்டிடத்தையும் கைப்பற்றும்வகையிலான சட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அலவி பவுண்டேசன் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட இன்னொரு நிறுவனமொன்றின் 50 கோடி ரூபாய் மதிப்பு வரத்தக்க சொத்துகளை பறிமுதல்செய்ய கோரும் மனுவை அரசு தரப்பு வழக்கற்ஞர் பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் நீதிமன்ற நடவடிக்கை பூர்த்தியாகும்வரை பள்ளிவாசல்களும் நிறுவனமும் செயல்படும்.
ஹூஸ்டன், நியூயார்க் நகரம், மெரிலான்ட், கலிஃபோர்னியா ஆகிய இடங்களிலிலுள்ள பள்ளிவாசல்கள், விர்ஜீனியாவிலிலுள்ள 100 ஏக்கர் நிலம், நியூயார்க்கில் 5 அவன்யூவிலிலுள்ள 36 மாடி ஃபியோ ஜெட் கட்டிடம் ஆகியவற்றிற்கெதிராகத்தான் அமெரிக்கா நடவடிக்கை மேற்க்கொள்கிறது.
ஈரான் அரசுக்கு சொந்தமான மில்லி வங்கிக்கு அஸ்ஸா பவுண்டேசன் வழியாக உதவிச்செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு உதவிச்செய்வதும் மில்லி வங்கி என்று அமெரிக்கா குற்றஞ்சுமத்துகிறது. மேலும் இதில் ஈரானின் உயர் அதிகாரிகள், அமெரிக்காவிற்கான ஈரான் தூதர், ஈரானின் முன்னாள் துணை பிரதமர் ஆகியோர் வியாபாரத்தொடர்பு வைத்திருப்பதாக அரசுதரப்பு வழக்கறிஞர்(அட்டர்னி) ப்ரீத் பராரா கூறுகிறார்.
அலவி பவுண்டேசன் ஈரான் அரசின் ஒரு பகுதியாக செயல்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் பலகாலமாக கூறிவருகின்றனர். அமெரிக்க இஸ்லாமிய தொடர்புக்கான கவுன்சிலின் இயக்குநர் இப்ராஹீம் ஹுப்பர் கூறுகையில், வணக்கவழிப்பாட்டுத்தலங்களான பள்ளிவாசல்களை அமெரிக்க அரசு கைப்பற்றுவது அனைத்து மத நம்பிக்கையுடைய மக்களின் மத சுதந்திரத்தை நடுங்கவைத்துள்ளதாக தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "எதிர்பாராத வகையில் மஸ்ஜிதுகளை கைப்பற்றும் அமெரிக்காவின் நடவடிக்கை துவங்கியது"
கருத்துரையிடுக