லண்டன்:ஆப்கானிஸ்தானிற்கு திரும்ப செல்ல மறுத்த ராணுவவீரர் ஜியோ க்ளெண்டன் மீது பிரிட்டீஷ் ராணுவ நீதிமன்றம் அதிகமான வழக்குகளை பதிவுச்செய்துள்ளது.
10 வருடம் தண்டனையை பெற்று தரும்வகையிலான குற்றங்கள் ஜியோ க்ளெண்டன் மீது சுமத்தப்பட்டுள்ளன. நாட்டின் ஆப்கானிஸ்தான் மீதான போர் பிரகடனத்திற்கெதிராக பேசியதாக புதிய வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போருக்கெதிரான பேரணியில் தலைமை வகித்த க்ளெண்டன் மீது சட்டப்பூர்வமான கட்டளையை கடைபிடிக்கவில்லை, ஒழுங்குமுறைகளை மீறியது ஆகிய குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் போரில் பிரிட்டீஷ் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுவருவதை கண்டித்து லண்டனில் கடந்தமாதம் கண்டன பேரணியொன்றை க்ளெண்டன் ஏற்பாடுச்செய்திருந்தார். அதில் ராணுவ வீரர்களை விடுதலைச்செய்க, பாதுகாப்பு அமைச்சகம் பேச்சு சுதந்திரத்தை மறுப்பதை நிறுத்துக ஆகிய முழக்கங்களுடன் இப்பேரணி நடைபெற்றது. பணிக்கு திரும்பவில்லை என்ற வழக்கில் க்ளெண்டன் ஏற்கனவே ராணுவ நீதிமன்றத்தில் விசாரணையை சந்தித்து வருகிறார். நான்கு வருடம் தண்டனையை பெற்றுதரும் வழக்கு இது. ஆனால் பேரணியில் கலந்துக்கொண்ட லின்ட்சி ஜெர்மன் கூறுகையில், "க்ளெண்டன் ராணுவ சட்டங்களை மீறி நடக்கவில்லை, மனசாட்சிக்கு எது சரியோ அதனை கூறமட்டுமே செய்தார்" என்று கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஒருபோதும் வெற்றி பெற முடியாததும், அநீதியான போரைத்தான் பிரிட்டீஷ் ராணுவம் ஆப்கானில் நடத்துவதாக நம்புகின்றவர்கள் இந்நாட்டில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த தேர்தலில் பெரும்பான்மையான பிரிட்டீஷ் வாக்காளர்கள் கோரியது ஆப்கானிலிருந்து பிரிட்டீஷ் ராணுவம் வாபஸ்பெறவேண்டும் என்பதே!.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தானிற்கு செல்ல மறுத்த பிரிட்டீஷ் ராணுவ வீரர் மீது அதிகமான வழக்குகள் பதிவு"
கருத்துரையிடுக