பீஜிங்:அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை கூறுபவர்களை தண்டிக்க சட்டத்திற்கு புறம்பான சித்திரவதைக்கூடங்கள் சீனாவில் அதிகரித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளன.
மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் புதிய புலனாய்வில் சீன அரசின் மனித உரிமைக்கு எதிரான அக்கிரமங்கள் வெளிப்பட்டுள்ளது.
அரசை விமர்சிப்பவர்களை கடத்திச்சென்று ரகசிய சித்திரவதைக்கூடங்களில் மாதக்கணக்கில் கொடிய தண்டனைகளுக்கு ஆளாக்குவதாக ஹெச்.ஆர்.டபிள்யூ வின் அறிக்கையில் தெளிவாக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியான சித்திரவதைகள், பாலியல் ரீதியான சித்திரவதைகள், உணவு வழங்காமலிருத்தல் ஆகிய தண்டனைகள் தங்களுக்கு அளிக்கப்பட்டதாக தண்டனைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
ஒரு வருடத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சித்திரவதைக்கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இச்சிறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் அதிகமான சம்பளத்தோடு நியமிக்கப்படுகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான சிறைக்கூடங்களை பற்றி அல்ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டபோது சீன அரசு இதனை மறுத்தது. இதனைத் தொடர்ந்து ரகசிய சிறைகளில் சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் கண்டன போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே இந்த அறிக்கையை மேற்க்கோள்காட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், "சீன குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சீன அரசை நிர்பந்திப்போம்" என்று கூறியுள்ளார். வருகிற நவம்பர் 15 ஆம்தேதி ஒபாமா சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள உள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "அரசின் மீது குற்றஞ்சுமத்துபவர்களுக்கு ரகசிய சித்தரவதைக்கூடங்களில் தண்டனை அளிக்கும் சீனா"
கருத்துரையிடுக