இந்த மோனோ ரயில் மெக்கா, மினா, அரஃபத் மற்றும் முஸ்தலிபா ஆகிய புனித் தலங்களை இணைக்கும்.
இதுகுறித்து சவூதி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஹபீப் ஜயின் அல் அபிதின் கூறுகையில், இந்த மோனோ ரயில்கள் மூலம் புனித தலங்களுக்கு இடையே 5 லட்சம் ஹஜ் யாத்ரீகர்களை கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த பயணம் 6 முதல் எட்டு மணி நேரங்களுக்குள் இருக்கும்.
இதன் மூலம் ஹஜ் சேவைக்காக இயக்கப்பட்டு வரும் 30 ஆயிரம் பெரிய மற்றும் சிறிய பேருந்துகள் அடியோடு வாபஸ் பெறப்படும்.
6.75 பில்லியன் சவூதி ரியால் செலவில் இந்த மோனோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ஹஜ் யாத்ரீகர்களை நிர்வகிப்பதில் நிலவி வரும் பெரும் சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
புனிதத் தலங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். சாலைகளில் நெரிசல் குறையும். மேலும், யாத்ரீகர்களும் தாங்கள் போக வேண்டிய புனிதத் தலத்திற்கு விரைவாக போக முடியும்.
அடுத்த ஆண்டு முதல் கட்ட மோனோ ரயில் சேவை தொடங்கும். அதற்கு அடுத்த ஆண்டு முழு அளவில் இந்த சேவை இயங்கும். இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், புனிதத் தலங்கள் தவிர பிற இடங்களுக்கும் யாத்ரீகர்களை மோனோ ரயில் மூலம் அனுப்ப முடியும்.
அடுத்த ஆண்டு முதல் கட்ட மோனோ ரயில் சேவை தொடங்கும். அதற்கு அடுத்த ஆண்டு முழு அளவில் இந்த சேவை இயங்கும். இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், புனிதத் தலங்கள் தவிர பிற இடங்களுக்கும் யாத்ரீகர்களை மோனோ ரயில் மூலம் அனுப்ப முடியும்.
இந்த மோனோ ரயில் திட்டத்தை மெக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம் அருகில் உள்ள ரயில் நிலையத்துடன் இணைப்பதற்கான சாத்தியக் கூறு குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இதன் மூலம் மெக்காவையும் மதீனாவையும் இணைக்கும் ஹர்மெயின் ரயில்வே போக்குவரத்துடன் இந்த திட்டத்தை இணைக்க முடியும்.
இந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி சவூதி மன்னர் அப்துல்லாவுக்கும், சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுக்கும் இடையே கையெழுத்தானது.
புனிதத் தலங்களை இணைக்கும் வகையில் ஐந்து மோனோ ரயில்களை இயக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் மோனோ ரயில் ஓடத் தொடங்கியதும், அடுத்த 2 மோனோ ரயில்களுக்கான பாதை 3 வருடங்களி்ல் முடிக்கப்படும். மீதமுள்ள 2 மோனோ ரயில் பாதை அதற்கடுத்த 3 ஆண்டுகளில் முடிவடையும்.
ஒரு மோனோ ரயில் பாதைப் பணிக்கு 4 பில்லியன் சவூதி ரியால் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
முதல் மோனோ ரயில் மினாவிலிருந்து தொடங்கும். இந்த ரயில் மூலம் 3.60 லட்சம் அரேபிய யாத்ரீகர்கள் உள்பட 10 லட்சம் யாத்ரீகர்கள் பயணிக்க முடியும்.
இந்த மோனோ ரயில் பாதை தரையிலிருந்து 8 முதல் 10 மீட்டர் உயரத்தில் அமையும். இதன் மூலம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படாது என்றார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "சவுதி: ஹஜ் பயணிகளுக்கு முதல் மோனோ ரயில்"
கருத்துரையிடுக