11 நவ., 2009

இடைத்தேர்தல் முடிவுகள் தரும் பாடம்

இடைத்தேர்தல் முடிவுகள் எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும் ஆபூர்வமாக சில வேளைகளில் முக்கியத்துவம் பெறுவதுண்டு. மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிவேகத்தில் தோல்வியை நோக்கி பயணிக்கிறது என்பதை அக்கட்சிக்கு ஏற்பட்ட தொகுதி இழப்புகள் தெரியப்படுத்துகின்றன.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது தொகுதிகளை தக்கவைத்ததுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு(சி.பி.எம்) கட்சியின் தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 10 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 7 தொகுதிகளை கைப்பற்றி இடது சாரிகளின் செல்வாக்கை கேள்விகுறியாக்கியுள்ளது. மக்களவைத்தேர்தலில் வாக்காளர்களிடமிருந்து வெளிப்பட்ட சி.பி.எம் மீதான வெறுப்பு மேலும் வலுவடைந்துள்ளது. தங்களுடைய சொந்த வாழ்விடத்திற்காக போராடும் ஏழைகளை மாவோயிஸ்டுகள் என்று அழைத்து அவர்களோடு போர் புரியும் புத்ததேவ் தலைமையிலான சி.பி.எம் அரசு தங்களுடைய ரகசிய தாராளமயமாக்கல் கொள்கையை கைகழுகாமலிருந்ததன் பலனைத்தான் இத்தேர்தல் முடிவுகள் சுட்டுக்காட்டுகின்றன. மக்களின் கோபத்தை ஏமாற்றி வாக்குகளாக பெற்ற மம்தா பானர்ஜியின் திரிணாமுல் என்னச்செய்யப்போகிறது என்பது வேறு விஷயம்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் செல்வி.மாயாவதி சிலைகளை நிர்ணயிப்பதில் மும்முரம் காட்டியபிறகும் இடைத்தேர்தலில் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. களத்திலிருந்து ஏகதேசம் காணாமல் போனது முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிதான். கடந்த மக்களவைத்தேர்தலில் பாபர்மஸ்ஜித் தகர்ப்பதற்கு காரணமான கல்யாண்சிங்கோடு கூட்டணிவைத்ததால் ஏற்பட்ட கோபம் மக்கள் மனதிலிருந்து இதுவரை மாறவில்லை என்பதை முலாயாம் சிங்கின் மருமகளின் தோல்வி உணர்த்துகிறது.
அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தேசியகட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும் அஸ்ஸாமில் வெற்றி கிடைத்தது. கேரளத்தில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு பெரிய முக்கியத்துவம் ஒன்றுமில்லை. கடந்த மக்களவைத்தேர்தலோடு ஒப்பிட்டால் ஆலப்புழையில் இம்முறை இடது முன்னணிக்கு வாக்குகள் வித்தியாசத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னேற்ற முன்னணிக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலவில்லை. வழக்கத்தைவிட இம்முறை முறையாக தேர்தலில் காங்கிரஸ் பணியாற்றியதால் கண்ணூரிலும், எர்ணாகுளத்திலும் வாக்குகள்வித்தியாசம் அதிகரித்துள்ளன.
க‌ட்சி ஆர‌ம்பித்த‌ 4 மாத‌ங்க‌ளுக்காக‌வே தேர்த‌லில் போட்டியிட‌ துணிந்த‌ சோசிய‌ல் டெமோக்ரேடிக் பார்டிக்கு கேர‌ளாவில் இனியும் அதிகம் ப‌ய‌ண‌ம் செய்ய‌வேண்டியுள்ள‌து என்ப‌தை க‌ண்ணூர் தேர்த‌ல் முடிவு சுட்டிக்காட்டுகின்ற‌து.
விம‌ர்ச‌ன‌ம்:தேஜ‌ஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "இடைத்தேர்தல் முடிவுகள் தரும் பாடம்"

Unknown சொன்னது…

election win is a tempravary in always

கருத்துரையிடுக