காபூல்:ஆப்கான் அதிபராக ஹமீத் கர்ஸாய் தேர்வுச்செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான டாக்டர் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.
தேர்தல் கமிஷனின் தீர்மானத்தின்படி ஒருவர் அதிபராக முடியாது, கர்ஸாயியின் நியமனத்திற்கு சட்ட பின்புலம் கிடையாது என்றும் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.
இத்தகைய அரசு ஊழலுக்கெதிராக போராட இயலாது. மக்கள் ஆதரவில்லாத ஒரு அரசு தீவிரவாதத்திற்கெதிராகவும், வேலைவாய்ப்பின்மைக்கெதிராகவும் எவ்வாறு போராட இயலும் என்று அப்துல்லாஹ் கேள்வியெழுப்பினார். கர்ஸாய் அதிபாரக தேர்வுச்செய்யப்பட்டதோடு சுதந்திரமாக செயல்படும் தேர்தல் கமிஷனின் சுதந்திரம் பறிபோனது தெளிவாகிவிட்டது. லட்சகணக்கான வாக்காளர்களின் விருப்பத்தை புறக்கணித்துவிட்டு கர்ஸாயியை அதிபராக அறிவித்த தேர்தல் கமிசனின் அவசரபோக்கு கேள்விக்குரியது என்றும் அப்துல்லாஹ் கூறினார்.
இந்த மாதம் 7 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிபர் தேர்தலிருந்து அப்துல்லாஹ் பின்வாங்கியதால் தேர்தல் கமிஷன் கர்ஸாயியை அதிபராக அறிவித்தது.
தேர்தல் கமிஷன் தலைவரையும் நான்கு அமைச்சர்களையும் முறைக்கேடு நடத்தியதால் அந்த பதவிகளிலிருந்து நீக்கவேண்டும் என்று அப்துல்லாஹ் கோரியிருந்தார். அவரின் கோரிக்கையை அரசு ஏற்கமறுத்ததால் அப்துல்லாஹ் போட்டியிலிருந்து விலகினார். அதே வேளையில் ஆப்கானில் ஐக்கிய அரசு உருவாக்கப்போவதாக கர்ஸாய் அறிவித்துள்ளார்.
செய்தி ஆதாரம்:தேஜஸ்
செய்தி ஆதாரம்:தேஜஸ்
0 கருத்துகள்: on "ஹமீத் கர்ஸாய் தேர்வுச்செய்யப்பட்டது சட்டவிரோதமானது - அப்துல்லாஹ்"
கருத்துரையிடுக