லண்டன்: ஆப்கானிஸ்தானிலிருந்து பிரிட்டீஷ் படைகளை வாபஸ் பெறவேண்டும் என பிரிட்டீஷ் உளவுத்துறை உயர் அதிகாரியும், பிரிட்டீஷ் பாராளுமன்ற பாதுகாப்பு கமிட்டி தலைவருமான ஹோவல்ஸ் கூறியுள்ளார்.
கார்டியன் என்ற பத்திரிகையில் ஹோவல்ஸ் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் ஆப்கானில் செலவு செய்யும் பணத்தை பிரிட்டனின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் மேற்க்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கை போராளிகளுக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்கவே பயன்படும். பிரிட்டனின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் கோபமும் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் போரில் பங்குபெறவேண்டுமா? என்பதை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் பிரிட்டனின் முன்னாள் தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ள ஹோவல்ஸ் எழுதியுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானிற்கு மீண்டும் ராணுவத்தினரை அனுப்புவதற்கு பொதுமக்களின் எதிர்ப்பை புறக்கணிக்கலாகாது என்றும் அவர் கூறியுள்ளார். 2001 ஆம் ஆண்டு ஆப்கான் போர் துவங்கியபொழுது அதில் பங்காளியாவதற்கு முக்கிய பங்காற்றியவர் ஹோவல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 9000 பிரிட்டீஷ் படையினர் தற்போது ஆப்கானில் உள்ளனர். இதுவரை 229 பிரிட்டீஷ் படையினர் ஆப்கானில் கொல்லப்பட்டுள்ளனர்.
செய்தி ஆதாரம்:தேஜஸ்
செய்தி ஆதாரம்:தேஜஸ்
0 கருத்துகள்: on "ஆஃப்கானிஸ்தானிலிருந்து பிரிட்டீஷ் படைகளை வாபஸ் பெறவேண்டும் பிரிட்டீஷ் உளவுத்துறை அதிகாரி ஹோவல்ஸ்"
கருத்துரையிடுக