தெஹ்ரான்:ஈரானில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்று 30 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிரான கோஷங்களை முழங்கியவாறு ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்தை திக்குமுக்காடவைத்தனர். 1979 ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகத்தில் நுழைந்த மாணவர்கள் அங்கிருந்த 52 நபர்களை பிணைக்கைதிகளாக்கினர். அமெரிக்காவின் கைப்பாவையாகயிருந்த ஷா பஹ்லவியின் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டும்விதமாக ஈரானில் இஸ்லாமிய புரட்சி மலர்ந்தது. பூட்டிக்கிடந்த அமெரிக்க தூதரகத்தின் முன்னால் அமெரிக்க, இஸ்ரேல், இங்கிலாந்துக்கெதிராக கோஷங்களை பொதுமக்கள் எழுப்பினர்.
ஆனால் இன்னொருபுறம் எதிர்கட்சியினர் கடந்த ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற ஈரான் அதிபர் தேர்தலில் முறைக்கேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி அரசுக்கெதிராக கோஷங்களை எழுப்பினர். வன்முறைகள் நடைபெறாமலிருக்க அரசு அதிகமான போலீஸ் படைகளை நியமித்திருந்தது. பல இடங்களிலும் போலீசாருக்கும் இவர்களுக்குமிடையே மோதல் நடைபெற்றது.
செய்தி ஆதாரம் :தேஜஸ்
0 கருத்துகள்: on "ஈரான்:இஸ்லாமிய புரட்சியின் நினைவு தினம் கொண்டாடப்பட்டது."
கருத்துரையிடுக