"லவ் ஜிஹாத்" என்ற பெயரில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெறும் அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்கவும், மதமாற்றத்தின் புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தி உண்மை நிலையை பொதுமக்களுக்கு உணர்த்தவும் முஸ்லிம் அமைப்புகள் களமிறங்கவேண்டும் என்று கேரள மாநில இமாம்கள் கவுன்சில் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
நீதிமன்றங்களும், பத்திரிகைகளும் பாசிசத்தின் சிந்தனையை கடன்வாங்குவது ஆபத்தானது. பரஸ்பர வாதபிரதிவாதங்களையும், குற்றச்சாட்டுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு இஸ்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் மார்க்கம் என்ற உன்னத நிலையை பகிரங்கமாக எடுத்துக்கூற முஸ்லிம் சமுதாய அமைப்புகள் களமிறங்கவேண்டும்.
கேரள மாநில உளவுத்துறையும், காவல்துறையும் “லவ் ஜிஹாத்” என்ற பிரச்சாரம் ஆதாரமற்றது என கூறிய பின்னரும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் புதிய முஸ்லிம்களை மனரீதியாக சித்திரவதைக்காளாக்கி, இஸ்லாத்தை தழுவ நினைக்கும் மக்களை பின்வாங்கச்செய்யவும் போலீஸ் அதிகாரிகள் செய்யும் முயற்சிகள் சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. எல்லா மத அமைப்புகளின் மதமாற்ற நிலையங்கள், மதமாற்றம் செய்யப்படுவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு கிடைக்கும் நிதியுதவிகள் வரும் வழிகள் ஆகியன பற்றி தெளிவான விசாரணை நடத்தப்படவேண்டும்.
"இஸ்லாத்தை அறியவும், அணுகவும்" என்ற நற்செய்தியை முன்னிறுத்தி வருகிற நவம்பர் 15 முதல் 23 வரை கேரளாவின் இரண்டு பகுதிகளில் பேரணிகள் நடைபெறும். மஞ்சேசுவரம் மற்றும் பாறசாலை ஆகிய இடங்களிலிருந்து ஆரம்பிக்கும் பேரணிகள் வருகிற நவம்பர் 23 அன்று ஆலுவா என்ற இடத்தில் நடைபெறும் பொது மாநாட்டோடு முடிவடையும் என இமாம்கள் கவுன்சில் கேரள மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இக்கூட்டத்திற்கு சேர்மன் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அர்ஷத் முஹம்மது நத்வி உட்பட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
செய்தி ஆதாரம் :தேஜஸ்
0 கருத்துகள்: on "”லவ் ஜிஹாத்” அவதூறு பிரச்சாரம்: முறியடிக்க முஸ்லிம் அமைப்புகள் களமிறங்கவேண்டும் இமாம்கள் கவுன்சில் வலியுறுத்தல்"
கருத்துரையிடுக