6 நவ., 2009

கேரளா:படகு மூழ்கி 8 பள்ளி மாணவர்கள் பலி

அரிக்கோடு(மலப்புறம் மாவட்டம்): கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள அரிக்கோடு என்ற இடத்தில் சாலியாறு என்ற ஆற்றில் சென்றுக்கொண்டிருந்த படகு மூழ்கியதில் பள்ளி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
அரிக்கோடு மூர்க்கநாட்டைச்சார்ந்த 7 மாணவர்களும், 1 மாணவியும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். மரணித்தவர்களின் பெயர் வருமாறு: ஷாஹிதலி,முஷ்ஹிக், தவ்ஃபீக், சிராஜுத்தீன், ஷிஹாபுத்தீன், தய்யிபா, ஷமீம், ஆகியோர். மாணவர் ஜிதின் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிட்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிய படகில் அளவுக்கதிகமான மாணவர்கள் ஏறியதால்தான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் மேல்நிலைப்பள்ளியில் பயில்பவர்கள். படகின் ஒருபாகத்திலிருந்த மாணவர்கள் எழுந்தபொழுது மறுபாகத்தில் மாணவர்களும் பள்ளிக்குக்கொண்டுச்செல்லும் பைகளும் இருந்ததால் எடை அதிகரித்து படகு சரிந்தது.
இப்படகில் மொத்தம் 25 மாணவர்கள் பயணித்துள்ளனர். மரணித்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமலேயே பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு கேரள மாநில அமைச்சர் பாலோளி முஹம்மது குட்டி, ஷாநவாஸ் எம்.பி, இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி, உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வந்தனர். சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.அபூபக்கர் மரணித்த மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். சில நாட்களுக்கு முன்பு தான் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் சுற்றுலா பயணிகள் பயணித்த படகு சரிந்து 42 பேர் மரணமடைந்த துயர சம்பவம் நிகழ்ந்த நிலையில் மீண்டும் ஒரு படகு விபத்து நடந்துள்ளது கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கவனக்குறைவும்,அலட்சியமும்,சரியான பராமரிப்பு வசதிகள் இல்லாமையும்தான் இத்தகைய விபத்துகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.
செய்தி ஆதாரம் :தேஜஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரளா:படகு மூழ்கி 8 பள்ளி மாணவர்கள் பலி"

கருத்துரையிடுக