குஜராத் கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட 5 மாத கர்ப்பினி பெண் பில்கிஸ் பானு வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரி சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
பாதுகாப்பு கருதி மும்பையில் நடந்து வரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோவிந்த் நாய், ஜஸ்வந்த் நாய், சைலேஷ் பட் ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க கோரியும், குற்றசாட்டில் விடுவிக்கப்பட்ட 7 பேருக்கு எதிராகவும் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
விடுவிக்கப்பட்ட 7 பேரில் குற்றத்திற்கு துணை போனதாக காவல் துறை அதிகாரிகளும், டாக்டர் தம்பதிகளும் அடங்குவர்.
மார்ச் மாதம் 3ந் தேதி, 2002- நடந்தேறிய இச்சம்பவத்தில் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் துரத்தப்பட்டு், பில்கிஸ் பானு நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
source:inneram
0 கருத்துகள்: on "குஜராத் கலவரம்: கர்ப்பினி பெண் பில்கிஸ் பானு வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சிபிஐ கோரிக்கை"
கருத்துரையிடுக