காஸா – டிசம்பர் இறுதியில் வடக்கு பெய்ட் ஹனூன் எல்லைக்கருகே 42 நாடுகளைச் பலஸ்தீன் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு சேர்ந்த மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள மாபெரும் பேரணியில் ஒன்றிணைந்து தமது ஆதரவைத் தெரிவிக்க அணிதிரளுமாறு பலஸ்தீனின் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (15.12.2009) மேற்படி அமைப்பின் தலைவர் முஹ்ஸின் அபூ ரமதான் கூறுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குட்பட்டுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தும் முகமாகவும் பலஸ்தீன் பிரஜைகளுக்கான விசேடமாக, பலஸ்தீன் நோயாளிகளுக்கான ஓர் அவமானச் சின்னமாக மாறியிருப்பதாலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எதிர்ப்புப் பேரணி நடத்த எரிஸ் எனப்படும் பெய்ட் ஹனூன் பிரதேசத்தைத் தெரிவுசெய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், காஸா மீதான மிக நீண்ட, மனிதாபிமானமற்ற முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு படியாகவே இம்மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அதன்போது பலஸ்தீன் கொடிகளை மட்டுமே ஏந்தியவர்களாகப் பங்குபற்றுநர்கள் முன்னேற இருக்கின்றனர் என்றும் கருத்துரைத்தார்.
நன்றி: PIC
0 கருத்துகள்: on "பெய்ட் ஹனூனை நோக்கிய பேரணியில் ஒன்றிணையுமாறு பலஸ்தீன் அரச சார்பற்ற நிறுவனங்கள் அழைப்பு"
கருத்துரையிடுக