ராஞ்சி:ஜார்க்கண்டில் இன்று பதவியேற்ற ஜார்கண்ட் முக்திமோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் 31 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையிலுள்ளதாக நேசனல் எலக்சன் வாட்ச் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
81 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு 44 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 18 எம்.எல்.ஏக்களில் 17 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. சீதா சோரன் என்பவர் மட்டும்தான் இக்கட்சியில் கிரிமினல் வழக்கு பதிவுச்செய்யப்படாத ஏக உறுப்பினர். மேலும் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் 8 உறுப்பினர்கள் மீதும் அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் யூனியன் கட்சி உறுப்பினர்களில் 4 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
ஜார்கண்ட் ஜனதிகார் மஞ்ச் கட்சியின் ஒரு உறுப்பினர் மீதும், ஐக்கிய ஜனதாதளத்தின் எம்.எல்.ஏ ஒருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஜார்கண்ட் ஜனதிகார் மஞ்ச் கட்சியின் எம்.எல்.ஏ ஜஹன்னாத் மஹோதாவிற்கெதிராக 14 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஷிபு சோரன் மகன் மீது ஆறு வழக்குகள் உள்ளன. துணை முதல்வர் பதவிக்கு பரிந்துரைச்செய்யப்பட்டுள்ள பாரதீய ஜனதாவின் ரகுபர் தாசுக்கெதிராகவும் வழக்கு உள்ளது.
குற்றச்செயல்களில் எதிர்கட்சியினரும் சோடைபோனவர்களல்லர். காங்கிரஸ் கட்சியின் 14 எம்.எல்.ஏக்களில் 11 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளனர். ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நான்குபேர் மீதும், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா(பிரஜதந்திரிக்) கட்சியின் எட்டுபேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
செய்தி:தேஜஸ்
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்: on "ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசில் 31 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்"
கருத்துரையிடுக