கல்வி மனிதனை கலாச்சாரமுடைய சத்திய சீலனாக மாற்றுகிறது என்று நீங்கள் கருதினால் அது தவறு என்று நிரூபிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
பொய் கூறுபவர்களில் பெரும்பாலோர் உயர்ந்த கல்வி கற்றவர்கள் தான் என்று உள அறிவியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொய் கூறுபவர்களில் பெரும்பாலோர் உயர்ந்த கல்வி கற்றவர்கள் தான் என்று உள அறிவியல் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெர்ஜீனிய,கலிஃபோர்னியா பல்கலைக்கழகங்கள் மேற்க்கொண்ட இத்தகைய வித்தியாசமான உள அறிவியல் ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. உயர் கல்வியை கற்றவர்கள் பொய்யைக்கூறுவதில் நிபுணத்துவம் பெற்றவராக விளங்குவதோடு பிறர் கூறும் பொய்யையும் எளிதில் கண்டறிந்துவிடுகின்றனர் என்பதுதான் இவ்வாய்வில் கிடைத்துள்ள ருசிகரமான உண்மை.
சுருங்கக்கூறினால் தற்போதைய கல்வித்திட்டத்தின் உருவாக்கம்தான் இந்த படித்த பொய்யர்கள்.பொய் கூறுவதில் ஆண்களின் ஆதிக்கத்தை முறியடிக்க இவ்வுலகில் பெண்களாலும் முடியும் என்பது உள அறிவியல் ஆய்வில் கிடைத்துள்ள மற்றொரு மறக்கவியலாத உண்மை. இவ்விஷயத்தில் ஆண்-பெண் சமத்துவம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
தொலைக்காட்சி தொடர்களில் வரும் பெண் கதாபாத்திரங்களை முன்மாதிரியாகக் கொள்வதால் பொய் கூறுவதில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.அதே வேளையில் படிப்பிலும்,சமூகத்தொடர்பிலும் கீழ் நிலையிலிலுள்ள பெண்களிடம் பொய்க்கதைகள் கூறுவது குறைவாகக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "படித்த பொய்யர்கள்"
கருத்துரையிடுக