ராஞ்சி, டிச.31: கடந்த 2005ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் முறையாக ஜார்கண்ட் முதல்வரானார் சோரன். அப்போது எம்.பி.யாக இருந்தார். அரசுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவை சட்டப் பேரவையில் நிரூபிக்க முடியாததால் 9 நாட்களில் பதவியில் இருந்து விலகினார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி சிபுசோரன் மீண்டும் முதல்வரானார். அப்போதும் எம்.பி.யாக இருந்தார். ஆனால், முதல்வர் பதவியில் நீடிக்க முடியவில்லை.
நடந்த முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. இப்போதும் எம்.எல்.ஏ.வாக இல்லாமலேயே சிபு சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
source:dinakaran

0 கருத்துகள்: on "3 முறை முதல்வர் ஒரு முறை கூட எம்எல்ஏவாக இல்லை"
கருத்துரையிடுக