வாஷிங்டன்:ஜிஹாதைப்பற்றி தவறானமுறையில் விமர்சித்த இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜிஹாதைப்பற்றி விளக்கமளிக்க கோரி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய முஸ்லிம்களின் கூட்டமைப்பான அமெரிக்க இந்திய முஸ்லிம் கவுன்சில் கோரியுள்ளது.
டிசம்பர் 23 ஆம் தேதி இந்திய உளவுத்துறையின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்திய ப.சிதம்பரம் ஜிஹாதை தீவிரவாதத்துடன் ஒப்பிட்டிருந்தார். இதற்கெதிராக பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
அவர் தனது உரையில் நம்பிக்கையில்லாத மக்களுக்கெதிரான போர் என்றும் ஜிஹாதைக்குறித்து விமர்சித்திருந்தார். இதற்கெதிராகத்தான் அமெரிக்க இந்திய முஸ்லிம்களின் கவுன்சில் ப.சிதம்பரத்தின் பேச்சை கண்டித்ததுடன் அவரிடம் ஜிஹாதைப்பற்றி விளக்குமாறும் கோரியுள்ளது.
அமெரிக்க இந்திய முஸ்லிம்கள் கவுன்சிலின் தலைவரான ரஷீத் அஹ்மத் கூறுகையில்,"இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி அறியாமையில்தான் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியிருக்கிறார்" எனத்தெரிவித்தார். முன்பு தேவ்பந்தில் ப.சிதம்பரம் முஸ்லிம்களின் நம்பிக்கைப்பற்றி புகழ்ந்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஜிஹாத் பற்றிய தவறான கருத்து:ப.சிதம்பரம் விளக்கமளிக்க அமெரிக்க முஸ்லிம் அமைப்பு கோரிக்கை"
கருத்துரையிடுக