பீஜிங்:சீனாவின் ஆக்கிரமிப்பிலிலுள்ள கிழக்கு துருக்கிஸ்தான் என்ற ஜின்சியாங்கில் கடந்த ஜூலையில் நடைபெற்ற கலவரத்தில் பங்குள்ளதாக குற்றஞ்சுமத்தி மேலும் 5 பேருக்கு தூக்கு தண்டனையை விதித்துள்ளது சீன நீதிமன்றம்.
இத்துடன் உரூம்கியில் நடைபெற்ற கலவரத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் சீனாவின் ஆக்கிரமிப்பிலிலுள்ள உரூம்கியில் உய்கூர் முஸ்லிம்களுக்கும், ஹான் இனத்தவருக்குமிடையே கலவரம் மூண்டது. இதில் 200 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதே வேளையில் என்ன குற்றத்தைச் செய்தார்கள் என்பதை வெளிப்படுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தூக்குத்தண்டனை மட்டுமில்லாமல் 8 பேருக்கு ஆயுள் தண்டனையையும் சீன நீதிமன்றம் விதித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 9 பேரின் தூக்குத்தண்டனை கடந்த நவம்பரில் செயல்படுத்தப்பட்டது. தண்டிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட உய்கூர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
1 கருத்துகள்: on "ஜின்சியாங் கலவரம்: மேலும் 5 பேருக்கு தூக்கு"
china is follwing fasisam
never succesed fasisam
கருத்துரையிடுக